|
|
பட்டினிச் சாவுகள் நிகழும் ஆப்பிரிக்காவைப் போல் தென்னாசியாவிலும் சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தரவால் 3 லட்சம் தமிழ் மக்கள் பட்டினியால் வாடும் கொடுமை அரங்கேறியுள்ளது. |
சிறிலங்கா அரசாங்கமே அறிவித்துக் கொண்ட "மக்கள் பாதுகாப்பு வல"யங்களிலிருந்து ஐ.நா மற்றும் உலக உணவுத் திட்ட அமைப்பின் பிரதிநிதிகள் வெளியேற சிறிலங்கா அரசாங்கமே உத்தரவிட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் அடைக்கலமாகியிருக்கும் 3 லட்சம் தமிழர்களின் நாளாந்த வாழ்க்கை கேள்விக்குறியாகி பட்டினிச்சாவுக்கு முகம் கொடுக்கும் அவலத்தில் உள்ளது. ஆப்பிரிக்காவின் கொங்கோ போல் தென்னாசியாவிலும் அவலம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் கைகளில் தமிழ் மக்கள் சிக்கியாக வேண்டும் என்ற சதித்திட்டத்துடன் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது என்றும் வன்னி செய்திகள் தெரிவிக்கின்றன. |
http://www.puthinam.com/full.php?2b0VrPe0dDk230ecOD8c3a4IdAF4d2iYh2cc2GuU3d43cUX3b037Qr3e
No comments:
Post a Comment