Tuesday, January 20, 2009

கனடாவில் இந்திய துணை தூதரகம் முன்பாக தமிழர்கள் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு

கனடாவில் இந்திய துணை தூதரகம் முன்பாக தமிழர்கள் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு
 
சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையை கண்டித்தும் உடனடிப் போர் நிறுத்தத்தை கோரியும் கனடா, ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரில் அமைந்திருக்கும் இந்திய துணை தூதரகத்தின் முன்பாக நேற்று மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.
கனடிய தமிழ் மகளிர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இக்கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை காலை 9:30 நிமிடம் தொடக்கம் முற்பகல் 11:30 நிமிடம் வரை இடம்பெற்றது.
ரொறன்ரோவில் கடுங்குளிரான காலநிலை இருந்தும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தாயக மக்களின் அவலங்களை காண்பிக்கும் பதாதைகளை தாங்கியவாறு வீதியின் இருமருங்கும் அணிவகுத்து நின்றனர்.




"இந்தியாவே உடனடியாக போரை நிறுத்து"
"சிறிலங்காவிற்கு ஆயுத உதவிகளை நிறுத்து"
"சிறிலங்கா அரசே தமிழ் மக்களைக் கொல்லாதே"
"இந்தியாவே தமிழ் மக்களைக் காப்பாற்று"
போன்ற வாசகங்களை தாங்கியும், முழக்கமிட்டும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
அத்துடன், தாயக பேரவலத்தை விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும் மாற்று இன மக்களுக்கு வழங்கி கவனத்தை ஈர்க்கச் செய்தனர்.
 










 

http://www.puthinam.com/full.php?2b34OOK4b33C6Df04dctVo0da0eA4AK24d2ISmA3e0dK0Mtbce02f1eW2cc4OcY4be

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails