வன்னியில் இரு முனை மோதல்களில் சிறிலங்கா படையினர் 51 பேர் பலி |
இத்தாக்குதல் குறித்து தெரியவருவதாவது:- புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி இன்று வியாழக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் சிறிலங்கா படையினர் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனை விடுதலைப் புலிகள் ஊடறுத்து தாக்கினர். இதில் 16 படையினர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர். இதில் ஆர்பிஜிக்கள், ஏகே எல்எம்ஜி உட்பட்ட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு நெத்தலியாற்றுப் பகுதியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் 35 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் பற்றி தெரியவருவதாவது:- விசுவமடு நெத்தலியாற்றுப் பகுதியில் இன்று அதிகாலை முன்நகர்வுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். சிறிலங்கா படையினருக்கு உதவியாக எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன. அத்துடன், படையினருக்கு ஆதரவாக வான்தாக்குதலும் செறிவான எறிகணைத் தாக்குதலும் படையினரால் மேற்கொள்ளப்பட்டன. இதில் படையினர் 35 பேர் கொல்லப்பட்டனர். பெருமளவிலானோர் காயமடைந்தனர். இதில் பிகே எல்எம்ஜி, ஏகே எல்எம்ஜி, பிகே எல்எம்ஜி, ஆர்பிஜி உள்ளிட்ட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. காயமடைந்த படையினரை பின்தளத்தில் உலங்குவானூர்திகள் ஏற்றிச் சென்றுள்ளன. |
No comments:
Post a Comment