Thursday, January 29, 2009

அதிரடி ஆட்டம் காம்பீர், ரெய்னாவுக்கு டோனி பாராட்டு

  

தமுல்லா, ஜன. 29-

இலங்கைக்கு எதிராக தமுல்லாவில் நேற்று நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 247 ரன் இலக்கை 11 பந்து எஞ்சி இருந்த நிலையில் எடுத்தது.

தொடக்க வீரர் காம்பீர் 62 ரன்னும், கேப்டன் டோனி 61 ரன்னும் (அவுட் இல்லை) சுரேஷ் ரெய்னா 54 ரன்னும் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.

வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி கூறியதாவது:-

வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. இதில் காம்பீர்-ரெய்னா ஜோடியின் திறமையான ஆட்டம் தான் முக்கிய அம்சமாகும். இதற்காக அவர்களை பாராட்டுகிறேன். இருவரும் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். ஓட்டு மொத்தத்தில் வீரர்கள் அனைவரும் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சியை தருகிறது. பந்து வீச்சும் நன்றாக இருந்தது.

இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே கூறும் போது, இந்த தோல்வியால் நாங்கள் துவண்டு விடவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள். எங்களால் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை என்றார்.

இந்தியா-இலங்கை மோதும் 2-வது ஒரு நாள் போட்டி வருகிற 31-ந் தேதி (சனிக்கிழமை) பகல்-இரவாக கொழும்பில் நடக்கிறது.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails