Saturday, January 24, 2009

கல்மடு குளக்கட்டு உடைந்ததால் சிறிலங்கா படையினருக்கு பாதிப்பு: உதய நாணயக்கார

கல்மடு குளக்கட்டு உடைந்ததால் சிறிலங்கா படையினருக்கு பாதிப்பு: உதய நாணயக்கார
 
கல்மடு குளத்தின் அணைக்கட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் தகர்த்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சிறிலங்கா படையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கல்மடு குளத்தின் அணைக்கட்டு நேற்று சனிக்கிழமை காலை தகர்க்கப்பட்டதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பரந்தன் - முல்லைத்தீவு (ஏ-35) சாலையின் ஒரு பகுதி, இராமநாதபுரம், தர்மபுரம் மற்றும் விசுவமடு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் வெள்ளம் நான்கு அடி உயரத்திற்கு பாய்ந்துள்ளது. இச்சம்பவத்தினால் படையினரும் பாதிப்படைந்துள்ளனர். எனினும் இழப்புக்கள் தொடர்பான தகவல்கள் தெரியாது. 
கல்மடு குளம் 4.5 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டதுடன், அது 500 ஏக்கர் நிலப்பரப்புக்கு தேவையான நீர்வளத்தையும் கொண்டுள்ளதாக என்றார் அவர்.

 

http://www.puthinam.com/full.php?2b38VVA4b3dFaFu34d0WOqJ2b02PcIMb4d2bSsG4e0dj6Kofce0cd5e12ccemj5Z3e

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails