அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா வரும் இருபதாம் தேதி பதவி ஏற்கிறார். இதற்காக அவர் இன்று வாஷிங்டன் போய்ச்சேர்ந்தார்.
இதற்கு முன்னதாக அவர் 1776-ம்ஆண்டு அமெரிக்க சுதந்திர போராட்டம் முதன்முதலாக தொடங்கப்பட்ட நகரான பிலடெல்பியாவுக்கு சென்றார். அங்கு இருந்து அவர் ரெயிலில் புறப்பட்டு 220கி.மீ.தொலைவில் உள்ள வாஷிங்டன் சென்றார்.
1861ம்ஆண்டு ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்பு இந்த நகரில் இருந்து தான் ரெயிலில் வாஷிங்டன் சென்றார். லிங்கன் வழியை பின்பற்றி ஒபாமாவும் பிலடெல்பியாவில் இருந்து வாஷிங்டன் சென்றார். அவருடன் அவர் மனைவியும் பயணம் செய்தார். வழிநெடுக திரளான மக்கள் கூடிநின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த ரெயில் வழியில் பல இடங்களில் மக்கள் கூட்டம் காரணமாக ஊர்ந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. வில்மிங்டன் நகரில் ரெயில்நின்றபோது,அந்த ஊரை சேர்ந்த துணை ஜனாதிபதி ஜோ பிடன் அந்த ரெயிலில் ஏறினார்.
இந்த ரெயிலில் அவர்கள் வாஷிங்டன் போய்ச்சேர்ந்தபோது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment