Wednesday, January 28, 2009

பிரணாப் முகர்ஜிக்கு அளித்த வாக்குறுதியை சிறிலங்கா அரசு மீறியது; இன்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்: 23 பேர் படுகொலை; 121 பேர் காயம்

 
 
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று இந்தியா வெளியுறவு அமைச்சருக்கு  வாக்குறுதி வழங்கி 12 மணி நேரத்துக்குள்ளாகவே தமிழ் பொதுமக்கள் 23 பேரை சிங்கள அரசு எறிகணை வீசி படுகொலை செய்துள்ளது. மேலும் 121 பேர் காயமடைந்துள்ளனர்.
 
இன்று புதன்கிழமை பிற்பகல் 1:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:30 நிமிடம் வரை இடைவிடாத எறிகணைத் தாக்குதல்கள் நடைபெற்றதாக வன்னி தகல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புக்கு சென்று நேற்று செவ்வாய்க்கிழமை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தபோது ஜனாதிபதி இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார். இது தொடர்பாக பிரணாப் முகர்ஜி கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தும் இருந்தார்.
ஆனால், 12 மணி நேரத்தில் அதுவும் பிரணாப் முகர்ஜி கொழும்பில் இருந்து புதுடில்லிக்கு புறப்பட்டு ஒரு மணி நேரத்தில் வன்னியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையிலேயே "மக்கள் பாதுகாப்பு வலய"ப் பகுதிகளான உடையார்கட்டு, மூங்கிலாறு, தேவிபுரம், சுதந்திரபுரம், வல்லிபுனம் ஆகிய பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கி தாக்குதல்கள் மக்கள் மீது நடத்தப்பட்டுள்ளதாக அவதானிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவில்  பாரதிபுரம் உள்ள காந்தி சிறுவர் பராமரிப்பு இல்லம் மீது இன்று புதன்கிழமை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மற்றும் சுதந்திரபுரம் பிரதேசத்தில் உள்ள தென்இந்திய திருச்சபை (அமெரிக்கன் மிஸன்) தேவாலயத்தை இலக்குவைத்து தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டனர். இதன்போது மதகுருவான பங்குத்தந்தை ஆனந்தராசாவும் மேலும் மூன்று பேரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 2004 ம் ஆண்டு சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட் சிறுவர்களைப் பராமரிக்கும் செந்தளிர் இல்லம் மற்றும் வயோதிப பெண்கள் புனர்வாழ்வு அபிவிருத்தி நிலையம் என்பனவற்றை நோக்கியும் ஆடலறி தாக்குதலை சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, உடையார்கட்டு, தேவிபுரம், வள்ளிபுனம் பகுதிகளில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் 45 பேர் புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு மருத்துவமனை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் இன்று வரையில் காயமடைந்தவர்களில் 556 பேர் மருத்துவமனையில் தற்போதும் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 200 பேர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா கொண்டு செல்லப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றனர்

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails