|
|
பாகிஸ்தானில் ஹசாரா ஜனநாயக கட்சி தலைவராக இருந்தவர் உசேன் அலியூசப்.ஷியா முஸ்லிம் பிரிவு தலைவராகவும் இருந்தார்.இவர் குவட்டா நகரில் காரில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதன் சுட்டுக் கொலை செய்தான்.அவன் சன்னி முஸ்லிம் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் என்று கருதப்படுகிறது. இதனால் குவட்டா நகரில் பயங்கர கலவரம் வெடித்தது.அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து வன்முறையில் ஈடுபட்டனர்.கடைகளுக்கும்,ஏராளமான வாகனங்களுக்கும் தீவைத்தனர். பாங்கி ஒன்றுக்கும் தீவைக்கப்பட்டது. கலவரத்தை ஒடுக்க போலீசார் முயன்றனர்.அவர்கள் மீது கல்வீசி தாக்கினார்கள்.இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.இதில் 12-பேர் காயம் அடைந்தனர்.இதே போல கவாத் நகரில் ஏற்பட்ட கலவரத்தில் 7-பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே வடக்கு வர்கிஸ்தான் பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் கிராம மக்கள் 2-பேரை சுட்டு கொன்றனர்.அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக கூறி இருவரையும் கொன்றுள்ளனர். |
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1233052035&archive=&start_from=&ucat=1&
No comments:
Post a Comment