. |
| |
வணக்கம் எம் தமிழ் உறவுகளே...! தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த கல்மடு பிரதேசத்தை இராணுவம் இறுதி முற்றுகையிட பல நுாறு படை அணிகளுடன் சமராடி சென்ற வேளை கல் மடு குள அணை குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தேங்கி நின்ற பல அடி தண்ணீர் சுனாமி அலைபோல பாய்ந்து சென்று அப்பகுதியில் முன்னேற்ற முயற்சியை மெற் கொண்ட படையணிகள் பலரை நீர் அடித்து சென்றுள்ளது. அவர்கள் அந்த கள முனை குளமருகில் நகர்தி நின்ற பலரக கனரக ஆயுதங்களும் அந்த நீரில் அடித்த செல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கத்தைய பிரபல ஊடகம் ஒன்றிற்கு இலங்கை இராணுவப்பேச்சாளர் தெரிவிக்கையில் தமது படையினருக்கு இழப்பு எற்பட்டுள்ளதாகவும் பலநுாநு படையினர் கொல்லப்பட்டும் காணமல் போயிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இவரது அறிவிப்பின்னாலேயே அங்கு நகர்ந்து நின்ற ஜயாயிரத்திற்கு மேற்ப்பட்ட படையணிகள் இந்த வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டும் அழிவுற்றிருக்கலாமென தெரிவிக்கபட்டுள்ளது. இந்த இராணுவத்தின் மேற்படி தகவலை வைத்த உலகமெல்லாம் பரந்து விரிந்து கிடக்கின்ற ஊடகங்கள் பலவிதமாக இராணுவ எண்ணிக்கை விகிதங்களை தெரிவித்து வருகின்றன. ஆனால் அடிப்படையில் இராணுவத்திற்கு பலத்த சேதம் ஏற்ப்பட்டுள்ளது உண்மையே. அதை இராணுவம் ஒப்பு கொண்டுள்ள போதும் எதிர் வரும் தேர்தலை கருதி அவை இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. இராணுவத்தின் கூற்றின் படி விடுதலைப்புலிகளால் இந்த அணைக்கட்டு உடைக்கப்பட்டு இருப்பின் இராணுவ தந்திரோபாய அடிப்படையில் மிக சிறந்த உத்தியாக கருதப்படும். இந்த அணைக்கட்டை உடைத்த விடுதலைப்புலிகள் வெறுமனெ முன்னேறி வரும் இராணுவத்தை தடுத்து நிறுத்தும் உத்தியை கையாள மாட்டார்கள் மாறாக பாரிய நில மீட்பு போரை நடத்துவார்கள். அப்படி பாரியமரபு வழி கெரில்ல யுத்த தாக்குதல்களை தீவிர படுத்தி நில மீட்பை நடத்தினால் பல்லாயிரம் இராணுவத்தின் விநியோகங்கள் தடுக்கப்பட்டால் அந்த இராணுவ அணிகள் விடுதலைப்புலிகளின் முற்றுகைக்கள் சிக்கியிருப்பார்கள். அப்படி ஒரு நிலை வருமேயானல் உலக நாடுகளிடம் இலங்கை அரசு தமது இராணுவத்தை காப்பாற்றுங்கள் என அறை கூவல் விடும். அப்போது அந்த வௌிநாட்டு படைகள் இராணுவத்தை காக்க வருமேயானல் இதை வைத்து விடுதலைப்புலிகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு செய்யும். இதன் பின்புல இராணுவ நகர்வுகளை விளங்கி கொண்ட விடுதலைப்புலிகள் தற்போது தாக்குதல் நடைபெறுமாயின்அந்த தாக்குதல்களை வௌியிடாமல் மூடி மறைக்கலாம். நிலங்களை மீட்ட பின்னர் வௌியிட கூடிய சாத்தியங்கள் உள்ளன. அரசு தனது இழப்பு விகிதத்தை ஒத்து கொள்ளாது வௌியிடாது. காரணம் எதிவரும் தேர்தலை மையமாகவைத்து இதனை அரசு வௌியிட்டு தனது ஆட்சியை இழக்க விரும்பாது. எனவே இவ்வாறானதொரு தாக்குதல் நடைபெறுகின்றதாயின் விடுதலைப்புலிகள் அந்த இராணுவ இழப்புக்களை அறிவிக்கும் வரை இலங்கை அரசும் மௌனம் காக்கும். எனவே தற்போது வௌிவருகின்ற அணைத்து ஊடக செய்திகளும் இராணுவம் வௌியிட்ட செய்திகளை மையமாகவைத்தும் அந்த களமுனையில் நின்ற இராணுவ பட்டாலியன்களையும் வைத்தே கணிக்கப்பட்டு வௌியிடப்படுகின்றன. எனவே விடுதலைப்புலிகள் இவ்வாறனதொரு தாக்குதல் நடைபெறுவதாக இருந்தால் அதன் முடிவில் செய்திகளை வௌியிடுவார்கள் அல்லாது அங்குள்ள மக்கள் மூலம் நாளடைவில் செய்திகள் கசியும் என நம்பலம். அதுவரை மக்களே அமைதிகாக்கமாறு வேண்டுகிறோம். |
No comments:
Post a Comment