Tuesday, January 27, 2009

சர்வதேச சமூகத்துக்கு மனித கெளரவம் என்றால் என்னவென்று தெரியுமா: வன்னி வைத்தியர்கள் விசனம்

 
 
சர்வதேச சமூகம் நவீன உலகில் உதவிகள் எதுவுமேயற்ற ஒரு இனக்குழுமீது நடக்கும் திட்டமிட்ட இனக்கொலையை மெளன சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த மக்கள் எங்கு போவதென்று அறியாமலிருப்பதைத் தவிர எந்தக் குற்றத்தையுமே செய்யவில்லை.
கொழும்பு அரசாங்கத்தின் இனப்படுகொலை இராணுவம் தனது கொலை வெறித் தாண்டவத்தை வன்னியில் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் போது, கவலை அளிக்கும் விதமாக இந்தியாவும், சர்வதேச சமூகமும் அம்மக்களை தம்மைக் கொன்று குவிப்பவர்களிடமே வந்து சரணடையுங்கள் என்று கேட்கின்றன.
எந்த விதத்தில் பார்த்தாலும் இவர்கள் எல்லோரும் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் அம்மக்கள் அழிய வேண்டும் என்பதைத்தான்" என்று உடையார்கட்டு மருத்துவமனையில் காயப்பட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்களை கவனித்துக்கொண்டே அந்த வைத்தியர் கேட்டார்.

"புலிகள் மக்களை கேடயங்களாகப் பாவிக்கிறார்கள் என்று சொல்லும் சாட்டு ஒரு விசமப் பிரச்சாரம்" என்றார் அவர்.

"95 வீதமான போர் முடிந்து விட்டது என்று அரசும், இராணுவமும் சொல்வதிலிருந்து தற்போதைய யுத்தம் புலிகளுக்கெதிரானது அல்ல, மாறாக இவ்வளவு காலமும் தமது போராளிகள் மேல் நம்பிக்கை வைத்து அவர்களுடன் நின்ற மக்கள் கூட்டத்துக்கு வழங்கப்படும் கூட்டுத் தண்டனை தான் இது"

"முதலைக் கண்ணீர் விட்டுவரும் அந்தச் சர்வதேச சமூகம் உண்மையாகவே அழிக்கப்பட்டுவரும் எமது மக்களுக்கு உதவ முடியும். கொழும்பின் காட்டேறி இராணுவத்தைத் தவிர அவர்களை யாருமே இதைச் செய்வதிலிருந்து தடுக்கப்போவதில்லை" என்று அவர் கூறினார்.
சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், எல்லைகளற்ற மருத்துவர்கள் போன்ற அமைப்புகளிடம் இம்மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவ உதவிகளைச் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

"எங்களுக்கு காயப்பட்டவர்களை கொண்டுசெல்ல உடனடி போக்குவரத்து வசதிகள் வேண்டும். இரத்தம் எங்களுக்கு அதி முக்கியமான தேவையாக உள்ளது. எங்களுக்கு மருந்துப் பொருட்களும், மருத்துவர்களும் தேவை" என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த வைத்தியர் கேட்டுக் கொண்டார்.

 

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0dvj0A0ecQG7V3b4F9EO4d2g2h2cc2DpY3d436QV3b02ZLu3e

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails