|
|
சிறிலங்காவின் 61 ஆவது சுதந்திர நாளை புறக்கணிக்கும் நோக்கில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் எதிர்வரும் புதன்கிழமை (04.02.09) மாபெரும் தீப்பந்தப் பேரணி நடைபெறவுள்ளது. |
வயது வேறுபாடின்றி அனைவரும் ஆயிரமாயிரமாய் அணிதிரண்டு எமது உறவுகளின் உயிர்காக்கவும் உரிமை மீட்கவும் உரத்துக் குரல் எழுப்புவோம் என நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. ஒஸ்லோ Youngstorget இல் மாலை 6:00 மணிக்கு தொடங்கி நோர்வே நாடாளுமன்றத்தின் முன்பாக தீப்பந்தப் பேரணி நிறைவடையவுள்ளது. நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெப்.4, 1948: ஈழத் தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் கைகளில் பிரித்தானியா தாரை வார்த்த இருண்ட நாள். பெப்.04, 2009: பௌத்த-சிங்கள பேரினவாத நாட்டின் 61 ஆவது ஆண்டு சுதந்திர நாள். தமிழ் மக்களுக்கு இது 61 ஆண்டு கால அடக்குமுறை வாழ்வு இந்த நாளை கறுப்பு நாளாக அடையாளப்படுத்தி சிறிலங்கா அரச பயங்கரவாத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்துவோம். உடனடிப் போர் நிறுத்தத்தினைக் கோரியும், தமிழின அழிப்பினை நிறுத்தவும், சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் ஒங்கிக் குரல் கொடுப்போம் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
No comments:
Post a Comment