இது தொடர்பில் அதன் ஆசிய-பசுபிக் பிராந்திய தலைவர் வின்சன்ற் புறொசல் கூறியுள்ளதாவது: சிறிலங்காவை விட்டு பல ஊடகவியலாளர்கள் வெளியேறி வருவதால் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி சிறிலங்கா அரசு அவர்கள் வெளியேறுவதை துடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்துலக சமூகம் குடிவருவோரை தடுப்பதில் தீவிரமாக உள்ளது. ஆனால், அவர்கள் சிறிலங்கா அரசு பயங்கரமான சூழ்நிலைகளை உருவாக்குவதை நிறுத்துவதே புத்திசாலித்தனமானது. சிறிலங்கா அரசின் வன்முறைகளால் தான் அதிக ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் இரத்தம் சிந்துவது, தனக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதை தடுக்கும் அரசின் உத்திகளில் ஒன்று. ஊடகவியலாளர்கள் இல்லாத நாடு ஜனநாயக நாடாக இருக்க முடியாது. சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் உயர் அதிகாரிகள் நேரடியான அச்சுறுத்தல்களை விடுத்து வருவதனால் அங்கு வாழ்வது சாத்தியமற்றது என்ற நிலை தோன்றியுள்ளது. முக்கியமான ஊடகங்களில் பணியாற்றி வந்த பல ஊடகவியலாளர்கள் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களினால் நாட்டை விட்டு வெளியேறவில்லை, அவர்கள் அரசின் அழுத்தங்களினால் வெளியேறி வருகின்றனர். லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையை தொடர்ந்து ஐந்து ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது எம்ரிவி தொலைக்காட்சியின் தலைவரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். சிறிலங்காவில் இருந்து ஊடகவியலாளர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், பொதுமக்களும் வறுமை காரணமாக வெளியேறவில்லை அரசியல் பழிவாங்கல்கள் காரணமாகவே வெளிவருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். |
No comments:
Post a Comment