இணையதள தேடுதலில் ஒபாமாவை மிஞ்சினார் "சத்யம்" ராஜு |
|
இந்தியா மற்றும் அயல்நாடுகளில் இணையதள தேடுதலில்,அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமாவைவிட "சத்யம்" நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு முதலிடத்தில் உள்ளார்.கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரையிலான 6-நாட்களில் இணையதளத்தில் கூகுள் வழியாக தேடுதல் நடத்தியவர்கள் குறித்த புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. அதில் ராஜுவும்,ஒபாமாவும் ஏறக்குறைய சம அளவில் இருந்தனர்.இருப்பினும் ராஜுவைக் காட்டிலும் ஒபாமா சற்றே முன்னிலையில் இருந்தார். ஆனால் கடந்த 7-ம் தேதி ஒரே நாளில் ராஜு குறித்து தேடுதல் நடத்தியவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து,ஒபாமாவை பின்னுக்குத் தள்ளியது.அன்று ஒரு நாள் மட்டும் ஒபாமாவைக் காட்டிலும் 10-மடங்கு அதிகமாக ராஜு குறித்து தேடுதல் நடத்தியவர்களின் எண்ணிக்கை அதிகமானது. அதன்பிறகு படிப்படியாகக் குறைந்து தற்போது ஒபாமாவுக்கு ஒருபடி மேலே ராஜு உள்ளார். இதில் சத்யம் நிறுவனர் ராஜு குறித்து அவரது சொந்த மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலிருந்துதான் அதிகம் பேர் இணையதளத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அதைத்தொடர்ந்து தமிழ்நாடு,கர்நாடகம்,குஜராத்,மகாராஷ்டிரம் மற்றும் தில்லி என மாநிலவாரியாக அடுத்தடுத்து அதிக எண்ணிக்கையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நகரங்களைப் பொருத்தவரை ஹைதராபாத் முன்னிலையில் உள்ளது.அதைத் தொடர்ந்து சென்னை,பெங்களூர்,புணே,மும்பை,தில்லி அமைந்துள்ளது. ஒபாமா குறித்து தேடுதலில் நடத்தியவர்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.நகரங்களைப் பொருத்தவரையில் சென்னை முதலிடத்திலும்,மும்பை,நவி மும்பை,பெங்களூர்,தில்லி ஆகியவை அடுத்தடுத்து உள்ளன. இந்தியாவுக்கு வெளியே,ராஜு குறித்து சௌதி அரேபியாவில் அதிகம் பேர் விசாரணை நடத்தியுள்ளனர்.அதைத்தொடர்ந்து சிங்கப்பூர்,பின்லாந்து,அமெரிக்கா,போலந்து,ஆஸ்திரேலியா,பிரிட்டன்,கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.ஆங்கிலம் தவிர போலந்து மொழியிலும் ராஜு தொடர்பாக இணையதளத்தில் நாடியுள்ளனர். |
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1232375342&archive=&start_from=&ucat=1&
No comments:
Post a Comment