வன்னியில் புலிகள் இராணுவத்துக்கு எதிரான வலிந்த தாக்குதலில்.....1500 படையினர் பலி, 5000 படையினர் சிறைபிடிக்கப்பட்டதாக ஊர்ஜிதப்படுத்தாத தகவல்கள் தெரிவிப்பு.. தொடர்ந்து கடும் சமர். (3 ம் இணைப்பு) |
பிந்திக்கிடைத்த தகவல் ஒன்றின் படி 1500 படையினர் கொல்லப்படுள்ளதாகவும் 5000 படையினர் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. படையினரின் பல அணிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னியில் உள்ள ஒரு பெரும் குளக்கட்டு புலிகளினால் திட்டமிட்டு திறக்கப்பட்டதால் அதில் சிக்குண்டு ஆயிரக்கணக்கில் இராணுவம் பேரிழப்பை சந்தித்துள்ளதாக கொழும்பிலுள்ள பெயர் குறிப்பிடாத இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் விஷ்வமடு பகுதியில் இன்று விடுதலைப்புலிகளை தாக்கும் தீவிரத்தில் சிங்களராணுவம் முன்னேறியதாகவும், அவர்களை முன்னேறவிடாமல் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி விரட்டியடித்ததாகவும் இலங்கை பத்திரிக்கை வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இன்று மதியம் 3மணிக்கு தொடங்கிய இந்த பதிலடி தாக்குதல் மாலை 6மணிக்கு முடிந்ததாகவும், இந்த பதிலடி தாக்குதலில் 1500 ராணுவத்தினர் பலியானதாகவும், 5000 ராணுவத்தினர் காயங்களுடன் தப்பி ஓடியதாகவும் அவர்களை விடுதலைப்புலிகள் பிடித்து சிறைபிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியான ராணுவத்தினரில் 500 சடலங்கள் மட்டுமே புலிகள் கைப்பற்றியுள்ளனர். இரவு வந்துவிட்டதால் சடலங்களை தேட முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இன்னும் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை. தொடரும்.. |
No comments:
Post a Comment