| ||
பிரான்ஸ் ஒன்றுகூடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் | ||
| ||
| ||
| ||
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்திருந்த இந்த இனப்படுகொலைக்கு எதிரான ஒன்று கூடல் மாலை நான்கு மணிக்கு நடைபெற்றது. இதன்போது தமிழ்மக்கள் மீதான இன அழிப்பை உடனே தடுத்து நிறுத்தவும், போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள சிறிலங்கா அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்கவும் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஒன்றுகூடலில் பெருந்திரளாக பிரான்ஸ் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு வன்னியில் ஏற்பட்டுள்ள அவலத்தை எடுத்து கூறினர். |
No comments:
Post a Comment