Monday, January 19, 2009

"தமிழீழமே ஒரே தீர்வு:" "ஒபாமாவுக்கான தமிழர்கள்" கருத்துக்கணிப்பில் உலகத் தமிழர்கள் ஏகோபித்த தீர்மானம்

"தமிழீழமே ஒரே தீர்வு:" "ஒபாமாவுக்கான தமிழர்கள்" கருத்துக்கணிப்பில் உலகத் தமிழர்கள் ஏகோபித்த தீர்மானம்
 
அமெரிக்காவில் இயங்கும் "ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பு அண்மையில் நடத்திய உலகளாவிய கருத்துக் கணிப்பில் 90 வீதத்திற்கும் அதிகமான தமிழர்கள் "தமிழீழத் தனியரசே" தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர் என அந்த அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் "புதினம்" செய்தியாளரிடம் தெரிவித்தார்.

"ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பினர் இணையத்தளம் ஊடாக நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில் இருநூறுக்கும் அதிகமான நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாக்களித்திருந்தனர்."
 
"வாக்களித்தவர்களில் 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் "தமிழீழத் தனிய"ரசை அமைப்பதே தமிழ் தேசியப் போராட்டத்திற்கு ஒரே தீர்வு என்ற தீர்மானத்தை இந்தக் கருத்துக் கணிப்பு மூலம் பிரகடனப்படுத்தியுள்ளனர்."
 
"இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவினை, உலகில் தேவையான இராஜதந்திரிகள் எல்லோருக்கும் நாம் அனுப்பியிருக்கின்றோம்" எனக் கூறிய அந்த ஊடகத் தொடர்பாளர் "அவர்களில் பலர் இந்த கருத்துக் கணிப்பின் முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் அமைந்துள்ளதாக எமக்கு பதில்களைக் கூட அனுப்பியுள்ளனர்" எனவும் தெரிவித்தள்ளார்.
 
"இலங்கைத் தமிழர்கள் ஒரே நாட்டிற்குள் ஒரு தீர்வை ஏற்றுக்கொள்வர் என்று கூறிவரும் உலகின் முதன்மையான மேற்குலக நாடுகளினதும், இந்தியாவினதும் கொள்கை வகுப்பாளர்கள் இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவு கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
இந்த கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகளையும், முடிவையும் கீழே உள்ள இணைப்பில் காணலாம்:
 
http://www.tamilsforobama.com/poll/result.asp
 
மேலும், அமெரிக்காவில், புதிதாக ஆட்சி அமைக்கவிருக்கும் பராக் ஒபாமாவுக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளராக நியமனம் பெற்றுள்ள ஹில்லாறி கிளின்டனுக்கும் மற்றும் தென்னாசியா தொடர்பான ஏனைய செயலர்களுக்கும் கொடுக்கவென "ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பினால் ஒரு கடிதம் தயாரிக்கப்பட்டிருந்தது.
 
இந்த கடிதத்தில் உலகெங்குமிருந்து மிகப் பிரமாண்டமான எண்ணிக்கையில் தமிழர்கள் தொடர்ந்தும் கையெழுத்துக்களை இட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த கடிதத்தின் தமிழ், பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கில மொழிப் பிரதிகளை கீழே உள்ள இணைப்பில் காணலாம். இந்த இணைப்பு வழியாக தொடர்ந்தும் மக்களை இந்த கடிதத்தில் கையெழுத்திடுமாறு "ஒபாமாவுக்கான தமிழர்கள்" கேட்டுக்கொள்கின்றனர்.
 
http://www.tamilsforobama.com/sign/letter.html

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails