பாரிஸ் மனிதசங்கிலிப் போராட்டம் - 4000 ற்கும் மேற்பட்டோர் அணி திரண்டனர் |
|
|
|
மாலை 17.00 மணிக்கு ஆரம்பமான இவ் மனித சங்கிலிப் போராட்டம் மாலை 18.30 மணிவரை இடம்பெற்றது. தமிழ் வர்த்தக நிலையங்கள் அதிகம் உள்ள லாச்சப்பலின் பிரதான வீதியான போர் வூர்க் செந்தனி வீதியின் இரு மருங்கிலும் அணிதிரண்டு நின்றனர். குளிரான கால நிலை நிலவிய போதும் ஆண்கள், பெண்கள், மாணவர் என அனைவரும் ஒன்றுதிரண்டு அணிவகுத்து நின்று எங்கள் தலைவர் பிரபாகரன் எங்கள் தேசம் தமிழீழம் கெசோவே மக்கள் போன்றே தமிழரும் போன்ற கொட்டொலிகளை ஒலித்தனர். சகல வர்த்தக நிறுவனங்களும் மாலை 17.00 மணி தொடக்கம் 18.00 மணிவரை தமது வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு இந்தப் போராட்டத்தில் கைகோர்த்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment