| | கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நெத்தலியாற்று பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னகர்வு தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் 24 மணிநேர தாக்குதலின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். | நெத்தலியாற்று பகுதியில் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் கனரக ஆயுதங்களின் செறிவான சூட்டாதரவுடன் நேற்று முன்நாள் சனிக்கிழமை முதல் சிறிலங்கா படையினர் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்டனர். இம்முன்நகர்வினை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் 24 மணிநேரமாக தீவிரமாக நடத்தி படையினரின் முன்நகர்வினை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதில் சிறிலங்கா படையினர் 35 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பெருமளவிலான படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நெத்தலியாற்றின் இரு மருங்கையும் உள்ளடக்கி ஒரு கிலோமீற்றர் அகலத்துக்கு சிறிலங்கா படையினர் இம்முன்நகர்வினை மேற்கொண்டிருந்தனர். | |
http://www.puthinam.com/full.php?2b44OO44b3aC6DR34d31VoK2a0344AAe4d2YSmAce0de0MtHce0df1eo2cc0ScYK3e
No comments:
Post a Comment