தயான் ஜயதிலக்கவால் சிறிலங்கா - இஸ்ரேல் உறவில் விரிசல் |
|
இஸ்ரேலின் காசா பகுதியில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் தூதுவர் தயான் ஜெயதிலக்க தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து சிறிலங்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. |
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: இஸ்ரேலின் காசா பகுதியில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் தூதுவர் தயான் ஜெயதிலக்க தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து சிறிலங்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தக்கூடும் என்ற அச்சம் அரச தரப்பில் ஏற்பட்டுள்ளது. தயான் ஜெயதிலக்கவின் கருத்துக்களுக்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக இஸ்ரேல் கடந்த வாரம் சிறிலங்காவுக்கு தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பியிருந்தது. இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் சிறிலங்காவின் வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்னவை கடந்த புதன்கிழமை சந்தித்து தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். மனித உரிமை சபையில் அரபு நாடுகள் எடுத்த நிலைப்பாட்டை விட சிறிலங்கா மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்ததாகவும் அதனை தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் பாலித கோகன்னவிடம் மார்க் சோபர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் நெருங்கிய நண்பன் யார் என கேள்வி எழுப்பியுள்ள பிரதிநிதி மிகவும் சினமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே சிறிலங்காவுக்கான ஆயுத உதவிகளை இஸ்ரேல் நிறுத்தக்கூடும் என்ற அச்சம் அரச தரப்பில் ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
http://www.puthinam.com/full.php?2b37QRA4b4dG5Es34d0ZSuL2b02R7CPb4d2d1tB4e0dJ3Pqkce0ch2g12cceid4U3e
No comments:
Post a Comment