| | டாடா நிறுவனம் 5000-தொழிலாளர்களை பணியில் இருந்து தாற்காலிகமாக நீக்கிவைக்க முடிவெடுத்துள்ளதாக,தெரியவந்துள்ளது. இந்த தாற்காலிக பணிநீக்கம் டாடாவின் இந்திய நிறுவனங்களில் இல்லை. பிரிட்டன் நிறுவனங்களில் ஆகும்.பிரிட்டனில் இயங்கும் கோரஸ் எஃகு உற்பத்தி நிறுவனம் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து தொழிலாளர்களை நீக்க முடிவெடித்துள்ளது.
அந்தவிதத்தில்,கோரஸ் நிறுவனத்தில் இருந்து 3,500-பேரும்,ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தில் இருந்து 1,500-பேரும் நீக்கப்படவுள்ளதாக,இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால்...:சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்குள் டாடா நிறுவனங்களும் சிக்கித் தவிக்கின்றன.இதனால் பிற நிறுவனங்களைப் போல் ஆள் குறைப்பு செய்து நிலைமையை சமாளிக்கும் முயற்சியில் அந்நிறுவனமும் ஈடுபட்டுள்ளது. கோரஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ஆள் குறைப்பு நடவடிக்கை குறித்து அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இதுவரை எவ்விதத் தகவலும் தெரிவிக்கவில்லை.ஆனால்,இதுகுறித்து அறிந்துள்ள தொழிலாளர்கள் தங்கள் வேலை பறிபோகப் போவதை நினைத்து கலக்கம் அடைந்துள்ளனர். அந்நாட்டின் தயாரிப்பு பிரிவில் இந்த அளவுக்கு பெரிய அளவில் ஆள் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை.பத்திரிகை கூறியுள்ளதுபோல் டாடா நிறுவனம் ஆள் குறைப்பு செய்தால் அது நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நெதர்லாந்து அரசும் கருதுகிறது. இதனால் டாடா நிறுவனத்துக்கு தேவையான உதவிகளை அளித்து ஆள் குறைப்பை தடுத்து நிறுத்துவது குறித்தும் அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.அந்நாட்டின் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் டாடா நிறுவன நடவடிக்கையை தடுத்தும் நிறுத்தும் வகையில் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே,டாடா நிறுவனத்தின் ஆள் குறைப்பு நடவடிக்கையை தடுத்தும் நிறுத்தும் திட்டத்தை நெதர்லாந்து அரசு திடீரென கைவிட்டுள்ளதாகவும்,இதனால் 5000-தொழிலாளர்களை அந்நிறுவனம் வீட்டுக்கு அனுப்புவது உறுதி என மற்றொரு தகவல் தெரிவிப்பதாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது. மேலும்,கோரஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனங்களில் ஆட்களை குறைத்து நிர்வாகச் சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது டாடா நிறுவனத்தின் நீண்டநாள் திட்டம்.இதைச் செயல்படுத்துவதில் தாமதித்து வந்தது.தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்படவும் அதை தனது திட்டத்துக்கு சாதகமாக்கிக் கொண்டது டாடா நிறுவனம் என்றும் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. | | |
No comments:
Post a Comment