
யாழ் ஆயர் வணக்கதிற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் தலைமையில் ஆயரின் வணக்க ஸ்தலமான யாழ் பெரிய கோவில் முன்னறிலில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள இதன் போது குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்துமாறு அவர் வேண்கோள் விடுத்துள்ளார்
யுத்த சூன்ய பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசம் இடம்பெயர் சிவிலியன்களது எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது குறைவாகக் காணப்படுவதாகவும், இதனால் சிவிலியன் நலன் கருதி குறித்த பகுதியை விஸ்தரிக்குமாறு கோரியுள்ளார். இவ்வாறு கிழக்கு பகுதியிலும் பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட வேண்டும் இது முற்றிலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment