'பயங்கரவாத்திற்கு எதிரான போர்' என்று கூறிக்கொண்டு சிறிலங்கா தமிழின அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கொண்டுவந்த திட்டத்திற்கு தற்போதைய புதிய ஜனாதிபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை அமெரிக்க புதிய அதிபர் பராக் ஒபாமா ஒரு ஆணை பிறப்பித்திருக்கின்றார். புஷ் அரசு கொண்டு வந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற திட்டத்திற்கு முடிவு கட்டும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். அதேநேரம், இத்தனை நாளும் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் நடத்தி வந்தபோரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
ஒரு ஜனாதிபதியானவர் வெறும் போரை மட்டும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்க முடியாது என வாஷிங்டன் போஸ்ட் இதழுக்கு இது தொடர்பாக அவர் கூறுகையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புஷ் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட உளவுக் கட்டமைப்பு அதிபர் ஒபமாவினால் துடைத்தழிக்கப் பட்டுள்ளது. கியூபாவில் அமைந்துள்ள 'கொண்டனாமாவே' முகாம் மூடுவதற்கும் உத்தரவிட்டுள்ளார். விசாரணையின்றி தடுத்து வைப்பதற்கு வசதியாக புஷ் அரசாங்கத்தினால் இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, உலகம் எங்கும் சி.ஐ.ஏ. நடத்தி வந்த இரகசிய சிறைகளும் ஒபமாவினால் தடை செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, முக்கியமாக செப்டெம்பர் 11 2001ற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட வழங்கறிஞர்களின் வாதங்களையும், சட்ட ஆணைகளையும், விசாரணைக் கருத்துக்களையும் தள்ளுபடி செய்துள்ளார்.
இது ஒரு சடுதியான வரலாற்று திருப்பம். அமெரிக்க வரலாற்றில் ஒபமாவின் முடிவு ஒரு சடுதியான மாற்றம் எனக் கூறப்படுகின்றது. அதேவேளை, அரசாங்கத்தின் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு எதிராக மக்கள் வைத்திருந்த அபகீர்த்தி ஒபமாவின் இந்த முடிவின் மூலம் களையப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க, ஒபமா அதிபராகப் பதவியேற்ற போது சிறிலங்கா அறிவித்த வாழ்த்துச் செய்தியில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒபமாவுடன் தோளோடு தோள் நிற்போம் என்று அறிவித்திருந்த நிலையில், அமெரிக்க அதிபர் இவ்வாறான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது சிறிலங்காவிற்கு பேரிடியாக அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment