Saturday, January 24, 2009

சிறிலங்காவில் ஊடகவியலாளர் மீதான வன்முறை: புதிய அமெரிக்க அரசு அதிர்ச்சி

 
 
சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் தீவிரமான வன்முறைகளையிட்டு புதிய அமெரிக்க அரசாங்கம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவு திணைக்களத்தின் பிரதி பேச்சாளர் றொபேர்ட் ஏ வூட் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவது குறித்து அமெரிக்கா கவலையடைந்துள்ளது.
இத்தகவல்கள் சிறிலங்காவில் ஊடகத்துறை சுதந்திரமாக செயற்படும் நிலை மோசமடைந்து வருவதையே காட்டுகின்றது.
ஜனநாயகம் தொடர்ந்து பேணப்படுவதற்கு சுதந்திரமானதும் தன்னிச்சையானதுமான ஊடகத்துறை அவசியமானது.
சிறிலங்கா அரசு எல்லா மக்களையும் பாதுகாப்பதுடன், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளையும் தடுக்க வேண்டும் என நாம் கேட்டு கொள்கின்றோம்.
பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக முழுமையானதும், தரமானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.

 

http://www.puthinam.com/full.php?2b3aQPJ4b3dB4Jr34d0USrO2b02U8IQb4d25UpF4e0ds0Kslce0cj1e62ccehk3Z3e

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails