|
சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து நேற்று வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதநேய பணிகளின் ஆணையாளர் லூயிஸ் மைக்கல் தெரிவிக்கையில்:- சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் யுத்தத்திற்குள் அகப்பட்டிருக்கும் பொதுமக்களை அப்பகுதியில் இருந்து பாதுகாப்பான பகுதிக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். இந்த யுத்தம் மாபெரும் மனித அவலத்திற்கு வழிகோலும். வடக்கு - கிழக்கில் போரிற்குள் சிக்குண்டிருக்கும் பொதுமகக்களின் தற்போதைய நிலைமையையிட்டு தாம் மிகவும் கவலையளிக்கிறது. பொதுமக்கள் இழப்புகளை தவிர்க்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட யுத்தம் நடைபெறாத பகுதிக்குள் பொதுமக்களை பாதுகாத்து அவர்களுக்குரிய மனிதநேய பணிகளை செய்வதற்கு ஆவன செய்யவேண்டும். வன்னிப் பகுதியில் பல நூற்றுக்கணக்கானோர் இறந்தும் அநேகமானோர் காயமடைந்தும், போதிய மருத்துவ வசதி இன்மையால் அல்லலுறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். |
No comments:
Post a Comment