| |
போர் முனையில் சிக்கியுள்ள தமிழர்களை கொஞ்சமாக கொல்கிறோம் என ராஜபக்ச கொழுப்புடன் கூறியுள்ளார். இதைக் கேட்பதற்காக பிரணாப் முகர்ஜி கொழும்புக்குப் போயிருக்கவே தேவை யில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணம் குறித்து டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணம் தமிழகத்தை பொறுத்தவரை, தமிழர்களை பொறுத்தவரை பெரும் ஏமாற்றமாகவே முடிந்திருக்கிறது. ஏனெனில் இலங்கையில் தமிழின படுகொலைக்கு காரணமான போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திக் கூறி வருவதற்கும், பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெளிவுபடுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழர்கள் எதிர்பார்த்து காத்து நிற்கிற, தமிழகம் வலியுறுத்தி வருகிற போர் நிறுத்தம் பற்றி இலங்கை அதிபரிடம் வெளியுறவுத்துறை மந்திரி பேசவே இல்லை என்பதை இந்தியத் தூதரகத்தின் அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. போரை நிறுத்த மாட்டோம்; வேண்டுமானால் போர் முனையில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான தமிழர்களை கொஞ்சமாக கொல்லுகிறோம் என்று இனவெறி பிடித்த ராஜபக்ச சொல்லியிருக்கிறார். இதைக்கேட்டு வருவதற்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி கொழும்புக்கு நேரில் சென்றிருக்க தேவையில்லை என்று கூறியுள்ளார். |
No comments:
Post a Comment