|
|
வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உணவுப் பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. |
வெல்லம்பிட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறிலங்காவுக்கான அமெரிக்கா தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் இதனை உலக உணவுத்திட்டத்தின் ஊடாக வழங்கினார். இந்நிகழ்வில் அவர் பேசியதாவது: அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பான பிரதேசங்களை மோதல்கள் அண்மித்து வருவதனால் வன்னியில் வாழும் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்களின் நிலை தொடர்பாக நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இரு தரப்பும் பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகளுக்கு அண்மையில் கனரக ஆயுதங்களை பாவிப்பதை விடுதலைப் புலிகள் தவிர்க்க வேண்டும். அரசும் பதில் தாக்குதல்களை பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது நிகழ்த்துவதை தவிர்க்க வேண்டும் என்றார் அவர். அமெரிக்க அரசின் இந்த உதவி பொருட்களில் 1,344 தொன் பருப்பு, 779 தொன் மரக்கறி எண்ணை, 4,270 தொன் கோதுமை ஆகியன அடங்கியுள்ளதாக அமெரிக்கா தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. |
No comments:
Post a Comment