| |
ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயிர்நீத்த வாலிபர் முத்துக்குமாரின் எதிரொலியாக சென்னையில் உள்ள இலங்கை அரசுக்கு சொந்தமான வங்கி அலுவலகம் அடித்து நொருக்கப்பட்டது. சென்னை வேப்பேரியில் பூந்தமல்லி சாலையில் வணிக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியில் இன்று மாலை 4மணிக்கு 50 க்கும் மேற்பட்டவர்கள் காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரை மீறி உருட்டுக்கட்டைகளுடன் உள்ளே நுழைந்தனர். வங்கியின் ஜன்னல்கள் அடித்து நொருக்கப்பட்டன. முக்கிய ஆவணங்கள் அள்ளி வீசப்பட்டன. இந்த தீடீர் தாக்குதலால் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். வணிகவளாகத்தின் மூன்று அடுக்கு மாடியில் இருந்த கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டன. வங்கி அதிகாரிகளின் கார்களும் அடித்து நொருக்கப்பட்டன. வங்கியின் அலுவலக நேரம் முடியும் சமயத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததால் பதட்ட நிலை உண்டானது. பின்னர் பொலிஸார் வநது பதட்ட நிலையை சரிப்படுத்தினர். மேலும் இந்த வங்கியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க அதிக அளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை வங்கி தாக்குதல் எதிரொலி: இலங்கை தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயிர்நீத்த வாலிபர் முத்துக்குமாரின் எதிரொலியாக சென்னையில் உள்ள இலங்கை அரசுக்கு சொந்தமான வங்கி அலுவலகம் அடித்து நொருக்கப்பட்டது. இதையடுது சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தையும் தாக்கக்கூடும் என்று முன்னெச்சரிக்கையாக அங்கே பொலிஸார் குவிந்துள்ளனர். எந்த அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது |
No comments:
Post a Comment