தங்களது தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களையே நியமிக்கும் அல் - காய்தாவின் புதிய தந்திரம் குறித்து அமெரிக்கா மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க சிறைகளில் இருந்த 30 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டதாகவும், சிறையிலிருந்து விடுதலையான அவர்கள் ஏமன் நாட்டிற்கு சென்று அல் - காய்தா அமைப்பிடம் தீவிரவாத பயிற்சி பெற்றிருப்பதாகவும் அமெரிக்க அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ள அமெரிக்கஅரசு நிர்வாகம், இந்த ஆபத்தை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏமனில் அல் - காய்தா அமைப்பு காலூன்றி உள்ளதாகவும், அங்கிருந்தபடியே அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டுவருவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில், தாக்குதலுக்கு அமெரிக்கர்களை பயன்படுத்தும் அல் - காய்தாவின் புதிய உத்தியை முறியடிக்க அமெரிக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment