மனித உரிமை பற்றிய விஷயங்கள் குறித்து சீனர்கள், கூகுளில் அதிகமாகத் தேடத் தொடங்கியது மட்டுமல்ல, கருத் துக்களையும் பகிரங்கமாக "ப்ளோக்' மூலம் தெரிவித்ததால், சீனா எரிச்சல் அடைந்தது. தனது சர்வாதிகாரத்துக்கு இவர்கள் மூலம் சிக்கல் வந்துவிடுமோ என்று பயந்த சீன அரசு, கூகுளைத் தணிக்கை செய்து வெளியிடத் தொடங்கியது. மனித உரிமை கருத்துக்களை மறைத்தது. அது மட்டுமல்லாமல் நெட் திருடர்கள், கூகுளுக்குள் புகுந்து முக்கிய இணையதளங்களைத் திருடிச் செல்வதும் தொடர்ந்து நடந்தது. இதன் பின்னணியில் சீனாவே இருக்கக் கூடும் என்று எரிச்சலடைந்த கூகுள், "சீனாவை விட்டு கூகுள் வெளியேறுவது குறித்து ஆலோசிக்கப்படும்' என்று அறிவித்திருந்தது. கூகுள் சீன இணையச் சந்தையிலிருந்து வெளியேறிவிட்டால் அதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது தான்தான் என்பதை உணர்ந்து கொண்ட சீனா இப்போது தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்துள்ளது.
சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான "ஜின்ஹுவா' கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கூகுளுடனான வணிகப் பிரச்னையை அரசியல் பிரச்னையாக உருமாற்ற எவ்வித உள்நோக்கமும் இல்லை. கூகுள் மட்டுமல்லாமல், சீனாவின் பல தேடல் இயந்திர நிறுவனங்களும் நெட் திருடர்களின் கொள்ளைக்கு ஆளாகியிருக்கின்றன. கூகுளுக்கு அடுத்தப் பெரிய சீன நிறுவனமாக "பைடு'வும் நெட் திருடர்களால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. மேலும், தற்போது சீனாவில் இணையதளங்களைப் பயன்படுத்துவோர் எண் ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2009 இறுதியில் 38 கோடி பேர் இணையதளங்களைப் பயன்படுத்துகின்றனர். இது கடந்த ஆண் டை விட அதிகமானதாகும். மொத்தத்தில் ஒரே ஆண்டில் 28 சதவீதம் அதிகரித் துள் ளது. குறிப்பாக, மொபைல் போன் மூலம் இணையதளங்களைப் பயன்படுத்துவோர் சதவீதமும் 10 கோடியிலிருந்து 23 கோடியாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், ஏற்கனவே உலகில் இணையதளங்களை அதிகமாகப் பயன்படுத்துவோர் இருக்கும் சீனாவில், தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கூகுள் வெளியேறுமானால், அதனால் ஏற்படப் போகும் நஷ்டம் சீனப் பொருளாதாரத்தில் பெருத்த அடியை உண்டுபண்ணும் என்பதால் சீனா பணிந்துள்ளது.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment