புதுதில்லி,ஜன.10: இந்திய அரசின் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களிடையே ஒருங்கிணைப்பும், ஆவணங்களை முறையாகப் பராமரிக்கும் பழக்கமும் இல்லாததால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை சீனாவிடம் இழந்துவிட்டோம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் ஆண்டுதோறும் சீனத்தின் பரப்பு அதிகரித்துக் கொண்டே வருவதாக அவர்களுடைய வரைபடங்கள் காட்டும்போதும் இந்திய அரசின் உரிய துறை அதிகாரிகள் அதில் அக்கறை செலுத்தவில்லை. இதனால் சர்வதேச அளவில் புழங்கும் வரைபடங்களில் இந்தியாவின் நிலப்பரப்பு குறுகிவிட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லே நகரில் சமீபத்தில் நடந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் இது அம்பலமானது. இதில் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், மாநில உயர் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
லே பகுதி ஆணையர் ஏ.கே. சாஹு இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். பிரிகேடியர் சரத் சந்த்,கர்னல் இந்தர் சிங் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment