Saturday, January 9, 2010

போர்க்குற்ற நீதிமன்றின் முன் இலங்கையை இழுத்துச் செல்ல ஐ.நா. "சிலுவை யுத்தம்" அரசாங்கம் கடும் விசனம்

 

altபோர்க்குற்ற நீதிமன்றத்தின் முன்னால் இலங்கையை இழுத்துச் செல்வதற்கான சிலுவைப் போரில் ஐ.நா. ஈடுபட்டிருப்பதாக அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.

கைதிகளுக்கு மரண தண்டனையை படையினர் நிறைவேற்றுவதாக குற்றம் சாட்டப்படும் ஒளிநாடா தொடர்பான புதிய அழுத்தம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டை ஐ.நா. மீது தெரிவித்திருக்கிறது.


ஆயுதமற்ற தமிழ்ப் புலி கிளர்ச்சியாளருக்கு மரண தண்டனையை படையினர் நிறைவேற்றுவதாக குற்றம் சாட்டப்பட்ட ஒளிநாடா பிரதிமையானது உண்மையானது என்றும் பக்கச் சார்பற்ற விசாரணையை கொழும்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நீதி விசாரணைக்குப் புறம்பானதும் தன்னிச்சையானதுமான மரணதண்டனை விவகாரங்களைக் கையாளும் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.


சர்ச்சைக்குரிய ஒளிநாடாவானது நம்பகத்தன்மையானது என்று அறிவிப்பை விடுக்கும் விடயத்தில் உரிய நடைமுறைகளை பின்பற்ற பிலிப் அல்ஸ்ரன் தவறிவிட்டதாக மனித உரிமைகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்ததாக ஏ.எவ்.பி.செய்திச் சேவை குறிப்பிட்டது.


இலங்கைக்கு எதிராக சர்வதேச (போர்க்குற்ற) விசாரணையை கட்டாயப்படுத்துவதற்கான தனது சிலுவை யுத்தத்தில் பிலிப் அல்ஸ்ரன் ஈடுபட்டுள்ளார். 


அவர் பின்பற்றிய நடைமுறையை நாம் ஆட்சேபிக்கிறோம். முதலில் தனது தகவலை அவர் எங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க ஏ.எவ்.பி.க்குக் கூறியுள்ளார்.


ஒளிநாடா மாற்றம் செய்யப்பட்டதொன்று என்பதில் கொழும்பு நம்பிக்கையுடன் இருப்பதாக சமரசிங்க வலியுறுத்திக் கூறியுள்ளார்.எம்மைப் பொறுத்தவரை ஒளிநாடா உண்மையானது அல்ல. அது பிழையானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

source:swissmurasam

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails