கூகுள் ஜிமெயில் தளத்தில் பல ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை நினைவில் வைத்திருப்பது பலருக்கு சிரமமாயுள்ளது என்ற குற்றச் சாட்டு பொதுவாக எழுவது உண்டு. இந்த சிரமத்தைப் போக்க, கூகுள் ஜிமெயில் தளத்தில் பயன்படுத்த எனத் தனியே கீ போர்ட் ஒன்று உருவாக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை 19.99 அமெரிக்க டாலர். விரைவில் இந்தியாவிலும் இது வரலாம்.
இது 19 கீகள் கொண்டு நம்பர் கீ பேட் போல அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கீயிலும் ஒரு ஷார்ட் கட் வழி அமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு மெசேஜை ஸ்டார் இட்டு அமைப்பது, சர்ச் ஒன்றைத் தொடங்குவது, மெசேஜ் த்ரெட்களுக் கிடையே செல்வது போன்ற செயல்பாடுகளுக்கு இந்த ஷார்ட் கட் கீகள் வழி அமைத்துக் கொடுக்கின்றன. இதனை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தலாம். இதனை செட் செய்வதற்கு எனத் தனியே டிரைவர் புரோகிராம் எதுவும் தேவையில்லை. ஆனால் ஜிமெயில் இணைய தளம் சென்று அதில் ஷார்ட் கட் கீகளை இயக்கும் விருப்பத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும்.
ஜிமெயில் இணைய தளம் இல்லாத போது, இந்த ஷார்ட் கட் கீகளில் என்ன கீகள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அந்த கீகளாக இவை செயல்படும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவென்றால், இதனை வடிவமைத்து, உருவாக்கித் தந்தது கூகுள் நிறுவனம் இல்லை. திரைப்பட தயாரிப்பாளர் சார்லி மேசன் என்பவராவார்.
ஏற்கனவே நீங்கள் ஜிமெயில் ஷார்ட் கட் கீகளை நன்கு பயன்படுத்துபவராக இருந்தால் இந்த கீ போர்டு தேவையில்லை. இருப்பினும் விரைவான செயல்பாடு இதன் மூலம் கிடைக்கும் என்று எண்ணுபவர்களுக்கு நிச்சயம் இந்த கீ போர்டு உதவியாக இருக்கும்.
ஜிமெயிலில் ஏறத்தாழ 69 கீ போர்டு ஷார்ட் கட் கீகள் இருக்கின்றன என்று எண்ணுகையில் இந்த கீ போர்டு நம் வேலையை எளிதாக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் இது கிடைக்கும் நாளை எதிர்பார்ப்போம்.
ஜிமெயில் டிப்ஸ்....
இன்று பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் இலவச இமெயில் தளமாக ஜிமெயில் உருவெடுத்துள்ளது. இந்த இமெயில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டால் தான் கூகுள் தரும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும். எனவே பயன்படுத்துகிறோமோ இல்லையோ பலரும் ஜிமெயில் தள அக்கவுண்ட் வைத்துள்ளனர்.
ஜிமெயில் தளம் சென்றவுடன் நமக்கு வந்திருக்கும் மெயில்களின் பட்டியலைப் பார்த்தால் அவை நமக்கு வந்த தேதிவாரியாக வைக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். பொதுவாக நாம் இமெயில்களைப் பார்த்தவுடன், அனுப்பியவர்களின் பெயரைப் பார்த்து, முக்கிய மெயில்களை முதலில் பார்ப்போம். பின்னர், மற்ற மெயில்களை சாவகாசமாகப் படிப்போம். எனவெ மெயில் வரிசையில் சில மெயில்கள் படித்தவையாகவும், சில படிக்காதவையாகவும் இருக்கும். படிக்காதவற்றைத் தேடி எடுத்து கிளிக் செய்து படிக்கும் சிரமத்தைப் போக்க, ஜிமெயில் ஒரு வசதியினைத் தந்துள்ளது. ஜிமெயில் அஞ்சல் பட்டியல் மேலாக உள்ள தேடல் பாக்ஸில் 'is:unread in:inbox' எனக் கொடுத்து 'Search Mail' கிளிக் செய்தால் நாம் படிக்காத மின் அஞ்சல்கள் மட்டும் காட்டப்படும். அவற்றைப் படிக்கலாம்; அல்லது நீக்கலாம்.
கிராஷ் ஆன பின் போல்டர்களைக் காப்பாற்ற
விண்டோஸ் எக்ஸ்பியில் நிறைய போல்டர்களைத் திறந்து வைத்து செயல்படும்போது ஒன்று கிராஷ் ஆனாலும் அனைத்தும் மூடப்படும். இதனை நாம் தவிர்க்கலாம். அதற்கான வழியை எக்ஸ்பி வைத்துள்ளது. கண்ட்ரோல் பேனலைத் திறந்து Folder Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் வியூ டேபிற்குச் செல்லவும். அதில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். அவற்றில் 'Launch folder windows in a separate process' என்று ஒன்று இருக்கும். அதன் அருகே டிக் மார்க் அடையாளம் ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
No comments:
Post a Comment