பல ஆண்டுகள் ஒரு கம்ப்யூட்டரைப் பயன்படுத்தியபின் அதனை விற்பனை செய்யலாம் என்று பலர் செல்கின்றனர். ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டால் அதனை வாங்கிப் பயன்படுத்துவது மிகக் கடினம். எனவே இப்போதெல்லாம் அத்தகைய கம்ப்யூட்டர்கள் பழைய பேப்பர், இரும்பு சாமான்களோடுதான் விலையிடப்பட்டு விற்பனை ஆகிறது. சரி, பரவாயில்லை; ஏதோ காசு வந்தால் சரி என்று அப்படியே கொடுத்துவிடாதீர்கள். ஹார்ட் டிஸ்க்கைக் கழட்டிக் கொண்டு கொடுங்கள். ஏனென்றால் என்னதான் பழைய பைல்களை அழித்திருந்தாலும் அவற்றை எப்படியாவது கண்டுபிடிக்கும் ஆட்கள் இருக்கின்றனர். உங்கள் ரகசிய மற்றும் பெர்சனல் பைல்கள் ஏன் இவர்களிடம் சிக்க வேண்டும். எனவே அவற்றைக் கழற்றி நீங்களே உடைத்துவிடுங்கள்.
அடுத்த ஜூலையில் விண்டோஸ் 8
விண்டோஸ் 7 வெளிவந்து சில மாதங்களே ஆன நிலையில், அதற்குள் விண்டோஸ் 8 B? என்ற கேள்விக் குறி எழலாம். ஆம், அடுத்த திட்டத்திற்குத் தயாராவது தானே அமெரிக்க நிறுவனங்களின் வாடிக்கை. அந்த வகையில் விண்டோஸ் 8 பதிப்பு தொடங்க மைக்ரோசாப்ட் அடுத்த ஜூலையைக் குறித்துள்ளது. இந்த திட்டத்தில் ஈடுபடுத்த மைக்ரோசாப்ட் ஏழு முறை புதிய வல்லுநர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அழைப்பு விடுத்த சில நாட்களில், அது எடுக்கப்பட்டுவிட்டாலும் பலர் இதனைக் கவனித்து மைக்ரோசாப்ட் திட்டம் குறித்து அறிந்துள்ளனர். அநேகமாக 2012ல், விண்டோஸ் பதிப்பு 8 வெளி வரலாம். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் 128 பிட் என்ற அடிப்படை அளவில் செயல்படும் சிஸ்டமாக இருக்கலாம் என்பது பலரின் கணிப்பு.
ஸ்பேஸ் மெயில்கள்
நம் இமெயில் இன்பாக்ஸில் நாளொன்றுக்குத் தேவையற்ற குப்பை மெயில்கள் குறைந்தது 20 ஆவது வந்து சேரும். நாம் அவற்றைப் படிக்காமலேயே குப்பைக்கு வீசுகிறோம். அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு இது குறித்த ஆச்சரியமான தகவல் ஒன்றைத் தெரிவிக்கிறது. இது போன்ற மொத்த ஸ்பேம் மெயில்களை அனுப்புபவர்கள் தாங்கள் வைத்துள்ள இமெயில் முகவரிகளை அகர வரிசைப்படுத்தி வைத்திருக்கின்றனர். தேவையற்ற மெயில்களை அனுப்புகையில் மேலாக உள்ள மெயில்களில் தாங்கள் விரும்பும் எண்ணிக்கயில் அனுப்பிவிடுகின்றனர். இதனால் ஆங்கில அகர வரிசைப்படி உள்ளதில் முதல் 12 (AL) எழுத்துக்களில் யூசர் நேம் வைத்திருப்பவர்களே அதிக ஸ்பேம் மெயில்களைப் பெறுவதாக அறியப் பட்டுள்ளது. எனவே உங்களுக்கு ஸ்பேம் மெயிலே வேண்டாம் என்றால் Z என்ற எழுத்துடன் உங்கள் யூசர் நேம் தொடங்கட்டும்.
கிளிப் போர்டு பெறுவது எப்படி?
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் எந்த டெக்ஸ்ட், படம், கிராபிக்ஸ் என எதனை காப்பி அல்லது கட் செய்தாலும் அது கிளிப் போர்டு வியூவரில் தான் சென்று அமரும். எனவே எந்த ஒரு நிலையிலும் நீங்கள் இறுதியாகக் காப்பி செய்தது என்ன என்று தெரிந்து கொள்ள கிளிப் போர்டு வியூவரைக் காணலாம். இதனை எங்கிருந்து பெறுவது? எந்த தொகுப்பிலும் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + சி (CtrlC) ழுத்துகிறீர்கள் அல்லவா? அப்போது இருமுறை C அழுத்துங்கள். உடனே கிளிப் போர்டு விரிவடையும். அதில் என்ன டெக்ஸ்ட் உள்ளது என்று தெரியவரும்.
அதிகம் தேடப்பட்டது எது?
2009 ஆம் ஆண்டு முடியப் போகிறது. இந்த ஆண்டில் கூகுள் தளம் மூலம் அதிகம் தேடப்பட்டது என்ன விஷயம்? அல்லது யாரை? என்று அந்த தளத்தில் தகவல்கள் கிடைத்துள்ளன. நூறு கோடிக்கு மேல் தேடல்கள் இருந்தாலும், அவற்றில் மீண்டும் மீண்டும் தேடப்பட்டவற்றை வடிகட்டியும், தேவையற்ற முறையிலும், நோக்கமின்றியும் தேடப்பட்டவற்றை நீக்கியும் தேடல்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதே போல் தனி நபர் குறித்த தேடல்களும் ஆய்விலிருந்து நீக்கப்பட்டன. பின் கிடைத்தவற்றை ஆய்வு செய்ததில் சில ஆர்வமூட்டும் தகவல்கள் கிடைத்தன.
உலக அளவில் அதிகம் தேடப்பட்டவர் இந்த ஆண்டில் மறைந்த மைக்கேல் ஜாக்சன் தான். அடுத்த இடத்தைப் பிடித்தது பேஸ்புக். இதற்குப் பின்னால் அணிவகுப்பவை – Twitter, sanalika, new moon, lady gaga, windows 7, dantri.com.vn and torpedo gratis ஆகும். பொழுது போக்கு என்ற பிரிவிலும் முதல் இடத்தை மைக்கேல் ஜாக்சன் பிடித்துள்ளார். சாப்பாடு பிரிவில் acai berry முதல் இடத்தைப் பெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment