Tuesday, January 19, 2010

சிவப்புப் பைககுள் என்ன இருக்கு ?

 

தெருவெங்கும் தோரணங்கள், ஒளி விளக்குகள்... பிரபல தொழிலதிபர் ஒருவருக்கு, 'மதிப்புக் குரிய குடிமகன்' என்ற பட்டம் வழங்கும் விழா. பெருமிதமாக மேடையேறி மைக் பிடித்த தொழில திபர், ''30 வருடங்களுக்கு முன், இந்த நகருக்குள் தனி ஆளாக நான் நுழைந்த தினம் இன்றும் என் நினைவில் இருக்கிறது. கிழிந்த பேன்ட்-சட்டை, சேறு சகதி அப்பிய ஷு, ஒரு சிவப்புப் பை... அவ்வளவுதான்! ஆனால் இன்று ஹோட்டல்கள், அபார்ட்மென்ட்கள், கிளப்கள் என்று ஏகப்பட்ட சொத்துக்கள். ஆம் நண்பர்களே! உங்கள் நகரம் என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டது. லெட்ஸ் பார்ட்டி!'' என்று விருந்தைத் துவக்கிவைத் தார். விதவிதமான உணவுகள், உற்சாக பானங்கள் என்று திளைத்து மகிழ்ந்த மக்கள் கூட்டத்தில், 'ஏழையாக இருந்தாலும் அபாரத் திறமை, விடாமுயற்சி காரணமாக வாழ்க்கையில் எவ்வளவு தூரம் உயர்ந்திருக்கிறார்!' என்று ஆச்சர்யக் கிசுகிசுப்புகள். ஓர் இளைஞன் மட்டும் அந்தத் தொழிலதிபரைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தான். ஒரு தனிமைத் தருணத்தில் அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டேவிட்டான்... '30 வருடங்களுக்குமுன், நீங்கள் ஒற்றை ஆளாக இந்த ஊருக்குள் வந்தபோது, உங்கள் கையில் இருந்த சிவப்புப் பையில் என்ன இருந்தது?'

உதடுகளில் சின்ன புன்னகையைப் படரவிட்ட அந்தத் தொழிலதிபர், 'கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் பணமாகவும், 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துப் பத்திரங்களும் இருந்தன!' என்றார்.

உங்களின் எந்த ஒரு முயற்சிக்கு முன்னும் 'அந்த சிவப்புப் பையில் என்ன இருந்தது?' என்ற கேள்வி யைக் கேட்டுப் பழகுங்கள்; அவ்வளவுதான் சக்சஸ் ஃபார்முலா என்கிறார் ஜான்.சி.மேக்ஸ்வெல். 'அவர் சாதனையாளர். அவர் சாதித்ததுபோல நம்மாலும் சாதிக்க முடியும்!' என்ற அதீத நம்பிக்கையை மட்டுமே துணையாகக்கொண்டு மனதில் எந்தத் திட்டமும் இல்லாமல் செக்கு மாடுபோல உழைத்துக்கொண்டு இருப்பவர் களுக்கு இந்தக் கதை சமர்ப்பணம். ஒவ்வொரு வெற்றியாளரிடமும் அவருக்கே உரித்தான சக்சஸ் ஃபார்முலா இருக்கும். அந்த ஃபார்முலா என்னவென்று தெரிந்துகொண்டு, அதை நமக்கு ஏற்றாற்போல மாற்றி அமைத்துக்கொள்வதில் இருக்கிறது சக்சஸ் சூட்சுமம். மேக்ஸ்வெல்லின் 'ஙிமீ கிறீறீ சீஷீu சிணீஸீ ஙிமீ' புத்தகம் முழுக்க பைபிளில் இருந்து சின்னச் சின்ன மேற்கோள்கள்.

உங்கள் திறமையை எப்படி 
வெளிக்கொணருவது?

உலகின் நம்பர் ஒன் சிற்பி மைக்கேல் ஏஞ்சலோ தன் வாழ்நாளில் செதுக்கியது மொத்தம் 44 சிற்பங்கள். அவற்றில் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டிய 14 சிற்பங்களுள், முழுமையாகவும் கச்சிதமாகவும் செதுக்கப்பட்ட 'டேவிட்' மற்றும் 'மோசஸ்' சிற்பங்கள் இன்று உலகப் பொக்கிஷங்கள். மைக்கேல் ஏஞ்சலோ தன்னுள் இருந்த திறமையை உணராமல் போனதால், இந்த உலகத்துக்கு அபாரமான 42 சிற்பங்கள் கிடைக்காமல் போயின. நம்மில் பலரும் அந்த முற்றுப்பெறாத சிற்பங்களைப்போலத்தான் இருக்கிறோம். நம்மைச் செதுக்கும் உளி எது அல்லது யார் என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறோம். சரி, நம்மை நாமே செதுக்கிக்கொண்டால்?! எப்படிச் செதுக்குவது? மிக மிக எளிமையான ஒரு பயிற்சியை மேற்கொள்வோமா?

உங்கள் பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில், வீட்டில் என எங்கேனும் உங்களைவிடச் சிறப்பாகச் செயல்படுபவர் என்று எவரேனும் இருப்பார் அல்லவா? உங்களைவிட அதிக மார்க், சிறந்த ரேங்க், உயர்ந்த பதவி, அதிக ஃப்ரெண்ட்லி என ஏதேனும் ஓர் அம்சம் அல்லது குணத்தில் நீங்கள் ஆசைப்படும் அல்லது பொறாமைப்படும்விதத்தில் இருப்பார் அல்லவா? அவரை ரோல் மாடலாக வைத்துக்கொள்ளுங்கள். தினமும் அவரைக் காட்டிலும் ஏதோ ஒரு விஷயத்தை நீங்கள் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற குறைந்தபட்சக் கொள்கையுடன் செயல்படுங்கள். ஏதோ ஒரு விஷயம்... அது எவ்வளவு மினிமமான சாதனையாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் உங்கள் கவ னத்தைக் குவித்துச் செயல்படுங்கள். வகுப்புத் தேர்வு, ஆபீஸ் மீட்டிங், பிறருக்கு உதவுவது என எங்கேனும் ஏதேனும் ஓர் இடத்தில் உங்களுக்கு நீங்களே சபாஷ் சொல்லிக்கொள்ளும் அளவுக் குச் செயல்படுங்கள்.

இந்திய கிரிக்கெட் அணி, தன்னைவிட வலுவான ஆஸ்திரேலிய அணியுடன் மோதும்போதுதான் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தும். கத்துக்குட்டி கனடா, பெர்முடா அணிகளுடன் மோதும்போது கொஞ்சம் விட்டேத்தியான மனப்போக்குடன்தானே விளையாடும்! அதே லாஜிக்தான். உங்களைவிட உயர்ந்தவருடன் போட்டியிடும்போதுதான் நீங்கள் மலைக்கு மேலே ஏறத் தொடங்குகிறீர்கள். விரைவாக ஏறுங்கள்!

வெற்றிகரமாகத் தோல்வியடையுங்கள்!

கிட்டத்தட்ட உலகை இயக்கிக்கொண்டு இருக்கும் கணிப்பொறி நிறுவனங்களுள் முக்கியமான நிறுவனம் ஐ.பி.எம். அதன் நிறுவனர் டாம் வாட்ஸன் தனது நிறு வனத்தின் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்விடம் புராஜெக்ட் ஒன்றை ஒப்படைத்தார். மாதக்கணக்கில் நீண்ட அந்த புராஜெக்ட், கிட்டத்தட்ட 12 மில்லியன் டாலர்கள் செலவு வைத்தது. முடிவில் ரிசல்ட் சைபர்.

இத்தனை செலவுவைத்துத் தோல்வி அடைந்ததால் நிச்சயம் தன்னை வேலையைவிட்டு அனுப்பிவிடுவார்கள் என்று தானாகவே ராஜினாமா கடிதத்தை எழுதிக்கொண்டு சென்றார் அந்த ஜூனியர். 'நான் இப்போது உனது ராஜினாமாவை எதிர்பார்க்கவில்லை. 12 மில்லியன் டாலர்கள் செல வழித்து நீ ஒரு பாடம் கற்றுக்கொண்டு இருக்கிறாய். 'எங்கே, எது, எப்படித் தப்பு?' என்று இப்போது உனக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கும். இப்போதுதான் இந்த நிறுவனத்துக்கு நீ 'மோஸ்ட் வான்டட்'. போ... போய் உன் வேலைகளைத் தொடர்!' என்றார் டாம்.

இதுதான் தோல்வியின் ப்ளஸ். நமது தவறுகளை உணர்ந்து அதைத் திருத்திக்கொள்ள முயற்சிக்கும்போது... நமது பலம், பலவீனம், திறமை குறித்து நமக்கே ஒரு தெளிவு கிடைக்கும்போது நாம் வெற்றிகரமாகத் தோல்வியடைகிறோம்.

வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு நூலிழைதான் வித்தியாசம். ஆனால், வெற்றி உணர்த்தாத பல பேருண்மைகளைத் தோல்வியின் அந்த நூலிழை வித்தியாசம் பளீரென நமக்குப் புரியவைக்கும். முன்னர் தங்கள் முயற்சிகளில் தோற்றவர்கள்தான் பின்னர் இந்த உலகத்தையே தேற்றியிருக்கிறார்கள்.

சாதாரண பிளாஸ்டிக் ரப்பர்பேண்ட்கள் ஒவ்வொன்றும் விதவித நிறங்களில், வித்தியாசமான நீளங்களில் அமைந்திருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட எலாஸ்டிசிட்டி (நெகிழ்ச்சித்தன்மை) இருக்கும். ஒவ் வொரு மனிதரும் அந்த ரப்பர்பேண்ட்கள்போலத்தான். உங்கள் முழுத் திறனுக்கும் நீங்கள் வளைந்துகொடுத்தால்தான் இந்த உலகில் சாதிக்க முடியும். நீங்களும் சாதிக் கப் பிறந்தவர்தான்!

 source:vikatan

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails