| | |
பல சமயங்களைச் சேர்ந்த மக்களும் தமது நம்பிக்கைப்படி கோயில்களைக் கட்டி வழிபாடு நடத்த முழு சுதந்திரமுள்ள ஒரே முஸ்லிம் நாடான மலேசியாவில் சமீப காலமாக இனங்களுக்கிடையே பிளவுகளை உண்டாக்கும் வகையில் சில குழுக்கள் செயற்பட்டு வருவது வேதனைக்குரிய விடயமாகும். அதாவது இக்குழுக்கள் திட்டமிட்டு மலேசியாவிலுள்ள முக்கிய கிறித்தவ தேவாலயங்கள் மீது தீக் குண்டு தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன. இதுவரை இத்தாக்குதல்களில் 4 தேவாலயங்கள் இலக்காகியுள்ளன. தேசா மெலாவத்தியில் உள்ள மெட்ரோ டபெர்னக்கால் தேவாலயம்,பெட்டலிங் ஜெயாவில் உள்ள அஷம்ப்சன் தேவாலயம், லைப் சாப்பால் தேவாலயம் ஆகியவையே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. பெட்டலிங் ஜெயாவில் உள்ள குட் ஷெப்பர்ட் லூதரன் தேவாலயமே இறுதியாகத் தீ வைக்கப்பட்ட தேவாலயமாகும். 'அல்லாஹ்' எனும் வார்த்தையை கத்தோலிக்க நாளேடான ஹெரால்டில் சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதித்ததே சமய உணர்வுகளைத் தூண்டி விட்டு இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் நிகழ காரணமாக அமைந்து விட்டது என்று மலேசியாவின் ஆளும் கட்சியான அம்னோவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை மலேசியப் பிரதமர் நஜீப் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் மத ரீதியான இத்தாக்குதல்களுக்கு தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். |
No comments:
Post a Comment