பல்களைச் சுருக்கி அமைக்கவும், பின் அவற்றை விரித்துப் பயன்படுத்தவும் விண்ஸிப் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு புரோகிராம் ஆகும். இந்த புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்த வேண்டும் என்றாலும், இதன் சோதனைப் பதிப்பு இலவசமாக இதன் நிறுவனத்தால் வழங்கப்படுவதால், பலரும் அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து, அதன் பல வசதிகளைப் பயன்படுத்தி விண்ஸிப் புரோகிராமின் புதிய பதிப்பு 14 அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கும் சோதனைப் பதிப்பு இலவசமாகக் கிடைக்கிறது.
விண்டோஸ் 7 தரும் லைப்ரரி மற்றும் ஜம்ப் லிஸ்ட் வசதிகளை விண்ஸிப் 14 நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறது. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து வந்தது போன்ற பயன்பாட்டு எளிமையை இது தருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட போல்டர்களில் உள்ள பைல்களை விண்டோஸ் 7 லைப்ரரி மூலம் ஸிப் செய்திடலாம். பைல்கள் எங்கிருந்தாலும் அவற்றை மொத்தமாக ஒரு ஸிப் பைலில் கொண்டு வரலாம். இந்த வசதி இதற்கு முன் இல்லை. விண்ஸிப் புரோகிராமினை ஜம்ப் லிஸ்ட்டில் இணைத்து வைக்கலாம். தேவைப்படுகையில் இதனைக் கிளிக் செய்து நேரடியாகப் பயன்படுத்தலாம். பைல்களைச் சுருக்கலாம்; விரித்துப் பயன்படுத்தலாம்.
விண் ஸிப் 14, விண்டோஸ் 7 வசதிகளைப் பயன்படுத்தினாலும், இதற்கு முன் உள்ள விண்டோஸ் சிஸ்டங்களுடனும் பயன்படுத்தலாம்.
இந்த பதிப்பில் சுருக்கப்பட்ட பைல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தானாகவே தற்காலிகமாகத் தான் உருவாக்கிய பைல்களை அழிக்கிறது. சுருக்கப்பட்ட பைல்களின் நகல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் அவற்றையும் நீக்குகிறது. பைல்களை முன்னதாகப் பார்ப்பதற்கு மட்டும் என உருவாக்கப்பட்டிருந்தால் அவற்றையும் அழிக்கிறது.
மேலே சொல்லப்பட்ட வசதிகள் அனைத்தும்,ஏற்கனவே விண்ஸிப் புரோகிராம்களில் தரப்பட்ட வசதிகள் அனைத்திற்கும் கூடுதலாகத் தரப்பட்டுள்ளன. இந்த விண்ஸிப் பதிப்பில் .zipx என்னும் கம்ப்ரஸன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது வழக்கமான சுருக்கும் நிலையைக் காட்டிலும், கூடுதலாக சிறிய அளவில் பைல்களைச் சுருக்குகிறது. ஏற்கனவே சுருக்கப்பட்ட வடிவில் இருக்கும் .jpgபைல்களை மேலும் 20% சுருக்குகிறது.
50 டாலர் கூடுதலாகச் செலுத்தினால் கூடுதல் வசதிகளுடன் விண்ஸிப் 14 கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி பைல்களை சிடி மற்றும் டிவிடிக்களில் எழுதலாம்.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே பைல்களைச் சுருக்கும் வசதி இருக்கையில், ஏன் இது போன்ற தனியாக கம்ப்ரஸ் செய்திடும் புரோகிராம்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என சிலர் வாதிடலாம். விண்ஸிப், விண்டோஸ் தரும் வசதிகளைக் காட்டிலும் சில கூடுதல் வசதிகளைத் தருகிறது. எளிதாக ஸிப் செய்வதும், அவற்றை விரித்துக் கொடுப்பதும் விண்ஸிப் புரோகிராமின் தனி குணங்களாகும்.
வழக்கம்போல விண்ஸிப் 14 பதிப்பின் சோதனைக்குத் தரப்படும் புரோகிராமினைhttp://www.winzip.com// என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். கட்டணம் செலுத்தி வாங்க விரும்பினால் 30 டாலர் செலுத்த வேண்டும்
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment