Saturday, January 16, 2010

நான் உயிருடன் இருக்கிறேன்

ஏவுகணை வீச்சில் சாகவில்லை "நான் உயிருடன் இருக்கிறேன்" தலிபான் தலைவர் மசூத் அறிவிப்பு
 பெஷாவர், ஜன. 16-
 
கடந்த ஆண்டு (2009) ஆகஸ்டு மாதம் பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வரிசிஸ்தான் பகுதியில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியது. அதில் அப்போதைய தலிபான்களின் தலைவர் பைதுல்லா மசூத் கொல்லப்பட்டார்.
 
இதையடுத்து ஹகிமுல்லா மசூத் புதிய தலைவராக பொறுப்பு ஏற்றார். இந்த நிலையில் இவரையும் ஏவுகணை வீசி அழிக்க அமெரிக்க ராணுவம் தீவிரமாக உள்ளது.
 
நேற்று முன்தினம் வர்சிஸ்தானின் வடமேற்கு மலை பகுதியில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசியது. இதில் 15 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் தலிபான்களின் தலைவர் ஹகிமுல்லா மசூத்தும் ஒருவர் என்று அறிவிக்கப்பட்டது.
 
இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதை தலிபான்கள் மறுத்தனர். இந்த நிலையில் நேற்று பத்திரிகை மற்றும் ஊடக அலுவலகங்களுக்கு ஒரு ஆடியோ கேசட் தலிபான்களால் அனுப்பப்பட்டது.
 
ஹகிமுல்லா மசூத்தின் பேச்சு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில், நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். ஏவுகணை வீச்சில் சாகவில்லை. அவ்வப்போது இதுபோன்று பொய்யான பிரசுரங்கள் செய்யப்படுகின்றன.
 
என்னை அழிப்பதன் மூலம் தெற்கு வர்சிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை அழித்து விடலாம் என கருதுகிறார்கள் இது ஒரு போதும் நடக்காது என்று அவர் பேசி இருந்தார்.
 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலும் இதே போன்று ஹகிமுல்லா மசூத் கொல்லப்பட்டார் என்ற வதந்தி பரவியது. அப்போதும் இதை தலிபான்கள் மறுத்து வந்தனர். தற்போது மசூத்தின் பேச்சு அடங்கிய ஆடியோவை வெளியிட்டு அவர் மூலமே மறுப்பு தெரிவித்துள்ளனர்

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails