Wednesday, January 6, 2010

மூக்கடைப்பைச் சரி செய்ய

 




ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. எரிச்சலை ஏற்படுத்தி செய்கிற வேலைகளுக்கு இடையூறாகவும் இருக்கிறது. முறையான சிகிச்சை அளிக்காவிடில் தொடரும் பிரச்னையாகவும் ஆகக்கூடும். ஜலதோஷம் பிடிக்கும்போது நிறைய இரசாயனங்களை உடல் வெளிப்படுத்துகிறது. அதனால் தும்மல், மூக்கடப்பு, மூக்கொழுகுதல், கண்ணில் நீர் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன. இந்த இரசாயனங்கள் மூக்கில் உள்ள இரத்த நாளங்களோடு செயல்பட்டு சீரான சுவாசத்தில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.

மூக்கடைப்பு இருக்கும்பொழுது காற்றை வடிகட்டும் திறன் குறைகிறது. இதனால் கிருமிகள் எளிதில் தொற்றி ஜலதோஷம் மோசமடைகிறது. மூக்கில் ஏற்பட்ட தொற்று காது மற்றும் தொண்டைக்கும் பரவுகிறது. இப்படி ஏற்படும்பொழுது பெரும்பாலான மருத்துவர்கள் என்டிபையோட்டிக்கை பரிந்துரை செய்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பை அலட்சியப்படுத்தக் கூடாது. மூக்கடைப்பு இருக்கும் பட்சத்தில் மூக்கால் மூச்சு விட ஆரம்பித்துவிடுவார்கள். தூங்கும்பொழுது வாயைத் திறந்து வைத்துக்கொண்டு தூங்குவார்கள். வயின் மூலம் சுவாசிக்கும்பொழுது கிருமிகள் வடிகட்டப்படுவதில்லை. இதனால் குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பாதிப்புக்களுக்கு உள்ளாகிறது. தொடர்ச்சியாக வாயனாலேயே சுவாசிக்கும்பொழுது தொண்டை அழற்சி பிரச்னை  ஏற்படுகிறது. ஆகையால் மூக்கடைப்பை ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய வேண்டும். ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். ஒரு மேஜைக்கரண்டி ஓமத்தை இடித்துத் தூளாக்கி துணியில் கட்டி முகர்ந்து வந்தாலும் மூக்கடைப்பு சரியாகும். 

 

source:dinakaran

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails