கடந்த 2007ம் ஆண்டு, இறுதியில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து ஆசிரியர் பணிக்கான நேர்முக தேர்வுக்கான அழைப்பு சாவித்திரிக்கு அனுப்பப் பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மேக்டலின் சாவித்திரி, அனகாபுத் தூர், அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 55. வரும் 2011ம் ஆண்டு மே மாதம் அவர் பணி ஓய்வு பெற உள்ளார். மொத்தம் 3 ஆண்டுகள் 3 மாதம் மட்டுமே அரசு பள்ளியில் அவர் பணியாற்றுவார்.
இது குறித்து, ஆசிரியை மேக்டலின் சாவித்திரி கூறுகையில், "செங்குன்றத்தில் வசித்து வருகிறேன். கணவர் அரசு பள்ளி ஆசிரியர். நான் பி.எட்., முடித்த பின், தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைக்கு சேர்ந் தேன். ஒரே பள்ளியில் 20 ஆண்டுகளாக பணிபுரிந் தேன். பொதுவாக, தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், படித்த பெற்றோர் களை பெற்றிருப்பர்; வசதியான வீட்டு குழந்தைகளாகவும் இருப்பர். அரசு பள்ளியில் தான் ஏழை, எளிய வீட்டு குழந்தைகள் படிக்கின்றனர். இதனால், ஒரு சில ஆண்டுகளாவது அரசு பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்பது என் கனவு. இதனால் தான் தவறாது வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று, என் பதிவை புதுப்பித்து வந் தேன். அதன் பலனாக கடந்த ஆண்டு பணி கிடைத்தது' என்கிறார் பெருமையாக.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment