Tuesday, January 12, 2010

இலங்கை தொடர்பாக டப்ளினில் மக்கள் நீதிமன்றத்தின் அமர்வு : உலகின் முன்னணி கல்விமான்கள் பங்கேற்பு


 

altஅயர்லாந்தின் தலைநகர் டப்ளினிலுள்ள திருத்துவக் கல்லூரியில் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை இலங்கையின் போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான நிரந்தர மக்கள் நீதிமன்ற அமர்வொன்று இடம்பெறவுள்ளது.

 

 

"போர்க்குற்றங்கள்" மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகவே இந்த மக்கள் நீதிமன்ற அமர்வு நடைபெறவுள்ளது. 2006/ 2009 இற்கிடையிலான புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான இந்த மக்கள் நீதிமன்ற அமர்வை இலங்கையில் சமாதானத்துக்கான ஐரிஷ் மன்றம் ஏற்பாடு செய்துள்ளதாக எக்ஸ்பிரஸ் நியூஸ் செய்திச் சேவை தெரிவித்தது.


ஆசியாஇ ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. ஆகியவற்றைச் சேர்ந்த சட்ட மனித உரிமைகள் குழுக்கள் நீதிமன்ற அமர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக அவர்கள் அழைக்கப்பட்டிருக்கும் அதேசமயம், நீதிமன்றத்தின் முன்னால் போர்க்குற்றங்கள் தொடர்பாக தனிப்பட்டவர்கள் குழுவினர் அறிந்த விடயங்கள் தொடர்பாக சாட்சியமளிப்பார்கள்.


மக்கள் நீதிமன்றக் குழுவில் உலகின் சில முன்னணி புத்திஜீவிகள், கல்விமான்கள், ஜூரர்களும் இடம்பெறுகின்றனர். இந்தியாவின் டில்லி மேல் நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம நீதிபதி ராஜிந்தர் சச்சாரும் இலங்கை யுத்தத்தின் பின்னரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பரிசீலிக்கவுள்ளனர். 


யுத்தத்தின் இறுதிக்கூட்டம் தொடர்பாக வெளியான அறிக்கைகள் தொடர்பாக நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்ற கருத்தைக் கொண்டிருந்த இலங்கையில் சமாதானத்திற்கான ஐரிஷ் மன்றம் இந்த ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளது. 


யுத்தம் இடம்பெற்ற பகுதிக்கு பத்திரிகையாளர்கள் நிவாரணப் பணிப்பாளர்கள் போன்ற சாட்சிகள் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டதால் "சாட்சியம் இல்லாத யுத்தம்" என்ற கருத்தை இலங்கையில் சமாதானத்திற்கான ஐரிஷ் மன்றம் கொண்டுள்ளது.


பிரெஞ்சு மருத்துவக் குழு தெரிவித்ததன் பிரகாரம், கொத்தணிக் குண்டுகள், வெள்ளி பொஸ்பரஸ் பொது மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் சித்திரவதை நீதிவிசாரணைக்குப் புறம்பான மரணதண்டனை, வல்லுறவு, பாலியல் வன்முறைகள், பொதுமக்களுக்கு எதிரான ஆயுதமாக உணவு, தண்ணீர் பயன்படுத்தப்பட்டமை போன்றவை தொடர்பாக ஊடக சான்றுகள் இருப்பதாக இலங்கையில் சமாதானத்திற்கான ஐரிஷ் மன்றம் கூறியுள்ளது.


இராணுவத் தீர்வை அமுல்படுத்தியதன் மூலம் 60 வருடகால இன மோதலுக்கு வெற்றியாளரின் சமாதானம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. 


இலங்கையின் இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வானது தீர்வாக அமைய முடியாது என்று 2002 இல் சர்வதேச சமூகம் உறுதி படத்தெரிவித்திருந்ததற்கு முரணானதாக இது இருப்பதாகவும் இலங்கையில் சமாதானத்திற்கான ஐரிஷ் மன்றம் குறிப்பிட்டிருக்கிறது.


இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தின் சமூக, பொருளாதார, கல்வி அந்தஸ்து தொடர்பாக ஆய்வு செய்த குழுவுக்கு தலைமை தாங்கியிருந்த ராஜிந்தர் சச்சாருடன் அகிம்சை, சகிப்புத் தன்மைக்காக யுனெஸ்கோவின் விருதைப் பெற்றிருந்த பிராங்கோயிஸ் ஹெவ்ராட், பெண்கள் உரிமைகள் தொடர்பாக நன்கு அறியப்பட்ட எகிப்தின் எழுத்தாளர் நாவல் அல் சாதாவி, தாய்லாந்தின் பௌத்த சமாதான பணியாளர் சுயால்க் சிவரக்ஷ, ஐ.நா.வின் முன்னாள் உதவிச் செயலாளர் நாயகமும் சர்வதேச சமாதான விருதைப் பெற்றவருமான டெனிஸ் டல்லிடே, மிலானிலுள்ள பி.பி.ரி.யின் செயலாளர் நாயகம் கியானி ரொக்நோனி இனப் படுகொலைகள் தொடர்பான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் டானியல் பெயர்ஸ்ரீன், டப்ளினிலுள்ள மனித உரிமைகள் பாதுகாவலர்களின் பாதுகாப்பு மன்றத்தின் முன்னணி அமைப்பின் பணியாளர் மேரி லோவ்லர், சர்வதேச சட்டத்துறை கல்விமான் ஓய்ஸ்ரீன் ரிவெற்றர், துருக்கியிலுள்ள குர்திஸ்ஷில் பிறந்த மனித உரிமைகள் பணியாளர் எரென் கெஸ்ஸின் ஆகியோர் இந்த மக்கள் நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர்.


நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகளை வெளியிடுவதற்கும் உரைபெயர்ப்பதற்கும் பல முன்னணி மாண்புமிக்கோர் இணங்கியுள்ளனர். 


அவர்களில் இந்திய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணஐயர், எழுத்தாளர் அருந்ததி ரோய் ஆகியோரும் இடம்பெறுகின்றனர். 


source:swissmurasam


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails