சீனாவில் திபத் புத்தமத தலைவருக்கு 8 1/2 ஆண்டு ஜெயில்
ஷாங்காங், ஜன. 1-
சீனாவின் ஆக்கிரமிப்பு பகுதியான தீபத்தில் கார்ட்ஷ் கவுண்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்பு செருங்கின்போச் (வயது 52). இவர் அங்குள்ள புத்த சாமியார்கள் மடத்தின் தலைவராக இருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டுதான் ஆக்கிரமித்துள்ள திபத் பள்ளிகளில் கட்டாய தேசபற்று கல்வியை சீனா அமல்படுத்தியது. இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு ஹர்பு தலைமை தாங்கினார். இவர் அனாதைகள் மற்றும் ஊனமுற்ற குழந்தைகளின் விடுதிகளை நடத்தி வந்தார்.
இப்போராட்டத்தில் அவர்கள் தீவிரமாக பங்கேற்றனர். எனவே, அவரை சீன போலீசார் கடந்த 2008-ம் ஆண்டு மே 18-ந்தேதி கைது செய்தனர். அவர் வீட்டில் இருந்து துப்பாக்கிகளும், 100 ரவுண்டு குண்டுகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதை தொடர்ந்து அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ஹர்புக்கு 8 1/2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஹர்பு வாழும் புத்தர் என திபத் மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
source:maalaimalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment