பீஜிங்:சீனாவில் இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களை பார்க்க ஏற்பாடு செய்த ஐந்தாயிரத்து 394 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சீனாவில் இன்டர்நெட் மையங்கள் புற்றீசல் போல பெருகி விட்டன. இந்த மையங்களில், ஆபாசப் படங்கள் பார்ப்பதும் அதிகரித்துள்ளது. அந்த நாட்டில், 40 கோடி பேர் இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.
கடந்த 2006ம் ஆண்டை விட, இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களை பார்ப்போரின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இன்டர் நெட் மையங்களில் ஆபாசப் படங்களை பார்க்க அனுமதித்த, ஐந்தாயிரத்து 394 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிலர் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டனர்."இந்த ஆண்டு ஆபாசப் படங்களுக்கு எதிரான நடவடிக்கை கடுமையாக இருக்கும். இதற்காக இன்டர் நெட் மையங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment