Saturday, January 9, 2010

திருந்தாத வாகன ஓட்டிகளால் விபத்து அதிகரிப்பு

  





விபத்தில்லாமல் வாகனங் களை ஓட்ட எத்தனை "சாலை பாதுகாப்பு வார விழா' நடத்தினாலும் நம்மவர்கள் திருந்துவதாக இல்லை. போக்குவரத்து விதியை மீறி மொபைல் போனில் ஜாலியாக பேசிக் கொண்டே, வாகனங் களை ஓட்டிச் சென்று, விபத் துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கும் செயல் குறைவதாக இல்லை.
 

சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல் கின்றன. பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும், கூடவே, விபத்துக்களின் எண் ணிக்கையும் அதிகரித்து விட்டது. விபத்தில்லாமல் பயணிக்க போக்குவரத்து போலீசார் பல விதிமுறைகளை விதித்துள்ளனர். "மது அருந்தி விட்டு வாகனங் களை ஓட்டக்கூடாது; மொபைல் போனில் பேசியபடி செல்லக் கூடாது; ஹெல்மெட் அணிய வேண்டும்' என, வாகன ஓட்டிகளின் நன்மைக்காக விதிமுறைகளை கொண்டு வந்துள்ளனர். என்னதான் விதிமுறைகளை கொண்டு வந்தாலும், நம்மவர்கள் அதை மதிப்பதில்லை. அதை "ஓவர்லுக்' செய்வதையே குறிக்கோளாக வைத்துள்ளனர். ஹெல்மெட் அணிவதில்லை. ஹெல்மெட் இருந்தாலும் பெட் ரோல் டேங்க் மீது வைத்துக் கொள்கின்றனர்.


போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளில், ஜாலியாக மொபைல் போனில் பேசியபடியே செல்கின்றனர். சிலர் மனைவி, குழந்தைகளுடன் செல்லும் போதே மொபைல் போனில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டுகின்றனர். ஒரு கையில் மொபைல் போனும், மறு கையில் பைக்குமாக "ஸ்டை லாக' ஓட்டிச் செல் கின்றனர். இன்னும் சிலர் கழுத்திற்கும், தோள்பட்டைக்கும் இடையில் மொபைல் போனை வைத்து பேசியபடியே பைக்கை ஓட்டுகின்றனர். பேச்சு சுவாரஸ்யத்தில் எதிரில் வருபவர்கள் மீதோ, பக்கவாட்டிலோ மோதி விபத் துக்குள்ளாகின்றனர். பின்னால் வரும் கனரக வாகனங்களில் கூட சிலர் சிக்கி உயிரிழக்கின்றனர். சமீபத்தில் கூட, வேதாரண் யம் அருகே மொபைல் போனில் பேசியபடி வேனை ஓட்டிய டிரைவரால் 10 பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும், மொபைல் போனில் பேசியபடி பைக் ஓட்டிச் சென்ற பலரும் உயிரிழந்துள்ளனர்; ஏராளமானோர் காயமடைந்துள் ளனர்.



உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்தாலும், வாகன ஓட்டிகள் மொபைல் போனில் பேசியபடியே செல்வதை நிறுத்தவில் லை. மாறாக, அதிகரித்துக் கொண்டே செல்கிறது. போக்குவரத்து போலீசார் எத்தனையெத்தனை விதிமுறைகள் விதித்தாலும், சாலை பாதுகாப்பு வார விழா நடத்தி விழிப் புணர்வு ஏற்படுத்தினாலும், வாகன ஓட்டிகளாகிய நாம் அவற் றை கடைப்பிடிக்காத வரையில் விபத்துக்கள் குறையப்போவதில்லை. உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது.


Front page news and headlines today


source:dinamalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails