இஸ்லாமாபாத்: டில்லியில் ஐ.பி.எல்., கிரிக்கெட் டுவென்டி 20 அணிக்கான ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் விலைக்கு வாங்கப்படாதது பாகிஸ்தானுக்கு கடும் கோபத்தையும் , எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு புறக்கணிக்கப்பட்டது இரு நாட்டு உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.
வரும் மார்ச் மாதம் 12 ம் தேதி டுவென்டி -20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான அணிகள் சார்பில் வீரர்களை ஏலம் எடுக்கும் வைபவம் மும்பையில் நடந்தது. இந்த ஏலத்தில் வெஸ்ட் இண்டீசின் அணி வீரர் கெய்ரன் போலார்டு மற்றும் ஷேன்பாண்ட் அதிகப்பட்சமாக மூன்றரை கோடி வரை விலை போயுள்ளனர். இந்த ஏலத்தில் பிரபல தொழில் அதிபர்கள் பங்கேற்றனர். பல ரவுண்ட்டுகளாக ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் முதல் ரவுண்டில் இந்திய வீரர் கைப் , பாகிஸ்தான் வீரர் அப்ரிதி, அக்மல் ஆகியோரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. இரண்டாவது சுற்றில் கைப் மட்டும் விலை போனார். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் அப்ரிதி , அக்மல் ஆகிய இருவரையும் யாரும் வாங்கவில்லை. இதனால் அப்ரிதி கடும் அதிருப்தி வெளியிட்டார்.
பார்லிமென்டில் எதிர்ப்பு : இந்நிலையில் பாகிஸ்தான் பார்லிமென்டிலும் இந்த விவகாரம் வெடித்தது. இதில் எதிர்கட்சிகள் இந்தியாவின் இந்த மூக்கறுப்புக்கு கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறுகையில் : இந்தியாவில் நடந்த ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது பாகிஸ்தானுக்கு மூக்கறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு நடந்து கொள்வது இரு நாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். இந்தியாவில் இனி பாகிஸ்தான் விளையாடலாமா என்பது குறித்தும், கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சபாநாயகர் பக்மிதா மிர்சா கூறுகையில் : இந்தியாவுக்கு செல்ல வேண்டியிருந்த பாகிஸ்தானிய பார்லி., குழுவினர் செல்ல மாட்டார்கள். என கூறியுள்ளார். அந்நாட்டு துறை விளையாட்டு துறை அமைச்சரும் எதிர்காலத்தில் இந்தியாவுடனான விளையாட்டு ரீதியிலான ஒப்பந்தம் , நடவடிக்கை இருக்காது என்றும் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் இந்த பேச்சுக்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்,எம்,கிருஷ்ணா மறுப்பு தெரிவித்துள்ளார். ஐ.பி.எல்., அமைப்பு வர்த்தக ரீதியானது. இதற்கும் இந்திய அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. வீரர்கள் விலை நிர்ணயிப்பது மற்றும் ஏலம் நடத்துவது ஐ.பி.எல்., தான் . இரு நாட்டு உறவை பாதிக்கும் படி இந்தியா நடக்கவில்லை. இந்திய அரசுக்கும், இந்த அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் நினைக்கிறது என்றார்.
பாதுகாப்பு பிரச்னை : பாகிஸ்தான் வீரர்களை ஐ.பி.எல்., திட்டமிட்டே புறக்கணித்துள்ளதாக செய்தி வட்டாரம் தெரிவிக்கிறது. அதாவது பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்கும் பட்சத்தில் பாதுகாப்பு பிரச்னை மற்றும் தேவையில்லாத சட்ட ஒழுங்கு விவகாரம் எழும் என்ற சந்தேகத்தினால் பாக்., வீரர்கள் புறக்கணிக்கப்ப்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மும்பை தாக்குதல் அடுத்து இந்த நிலைக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இரு நாடுகள் இடையே விளையாட்டு போர் துவங்கியாச்சு
source:dinamaalr
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment