மாஸ்கோ : தஜிகிஸ்தான் நாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். முன்னாள் சோவியத் குடியரசில் இருந்து பிரிந்த நாடான தஜிகிஸ்தானின் வான்ச் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 5.1 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானை யொட்டி உள்ள இந்த நாடு மலைகள் நிறைந்த நாடு. எனவே, நிலநடுக்கத்தால் பாறைகள் உருண்டன. வான்ச் மாவட்டத்துக்கு செல்லும் வழியில் நிலசரிவுகள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் இந்த மாவட்டத்தில் உள்ள ரோக், ஜிஷ்கோ கிராமங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. இந்த கிராமங்களில் 20 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. எனினும் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment