ஈழப் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'சிவப்பு மழை" என்ற தமிழ் படம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் தேவா இசையில் கனடிய தமிழர் சுரேஷ் ஜோக்கி பனிரெண்டு நாட்களில் தயாரித்து, நடித்த படம் சிவப்பு மழை. இப்படத்தில் நாயகியாக மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்ட இப்படம், மிகக் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட படம் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இதற்குமுன் 1990-ல் பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றால் பதின்மூன்று நாட்களில் தாயாரிக்கப்பட்ட 'பாஸ்ட் பார்வேர்ட்' என்ற ஆங்கிலப் படமே குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட படமாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருந்தது. அந்த சாதனையை முறியடித்திருக்கிறது. 'சிவப்பு மழை'. கின்னஸ் புத்தக நிறுவனத்திடமிருந்து இதற்கான சான்றிதழ் சமீபத்தில் சிவப்பு மழை படக் குழுவினருக்கு அனுப்பபட்டு இருந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்ட கின்னஸ் சாதனைகளை செய்தவர் சுரேஷ் ஜோக்கிம். இவர் இலங்கையில் நடைபெற்ற ஈழப் போராட்டத்தை பின்னணியாகக் கொண்டே இந்தப் படத்தை உருவாக்கியிருந்ததால், சென்சார் சான்றிதழ் பெறுவதில் பல போராட்டங்களையும் சந்தித்தது. விரைவில் திரைக்கு வர உள்ள இப்படத்தை 23 நாடுகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார். தற்போது ஆங்கிலம், பிரெஞ்சு உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் சப் டைட்டில் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 'சிவப்பு மழை' தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டு அதிக மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட படம் என்ற சாதனையையும் புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. source:vikatan |
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment