Saturday, January 16, 2010

டிவி பார்ப்பதால் குழந்தைகளின் பேச்சு திறன் குறைகிறது


  


பிரிட்டனில், "டிவி" பார்ப்பதிலும் கம்ப்யூட்டரில் விளையாடுவதிலும், பெரும்பாலான குழந்தைகள் நேரத்தை கழிக்கிறார் கள். இதனால், அவர்களிடத்தில் பேச்சு திறன் குறைந்து போகிறது என்று ஆய்வு கூறுகிறது. பிரிட்டன் குழந்தைகளின் பேச்சுத் திறன் குறித்து சர்வேயை அரசு தகவல் தொடர்பு அதிகாரி ஜீன் கிராஸ் நடத்தினார்.
இந்த சர்வேயில் பிரிட்டனில் பெரும்பாலான குழந்தைகள் "டிவி" பார்ப்பதிலும், கம்ப்யூட்டரில் விளையாடுவதிலும் பொழுதை கழிக்கின்றனர். அப்போது, அவர்களிடத்தில் பேசுவதற்கான வாய்ப்பு குறைகிறது. இதன் மூலம் ஆறில் ஒரு குழந்தைக்கு பேசும் திறன் குறைவாக உள்ளது என்று இந்த சர்வே கூறுகிறது.

இந்த சர்வே மேலும் கூறுகையில், 25 சதவீத பிரிட்டன் இளைஞர்கள் தங்களது பேசும் திறனில் சில குறைபாடுகளுடன் உள்ளனர். 5 சதவீதம் பேர் முக்கிய குறைபாடுகளோடு இருக்கின்றனர். சிறுமியரை பொருத்தமட்டில் 13 சதவீதத்தினர் சிறு குறைபாடுகளோடும், 2 சதவீதம் பேர் முக்கிய குறைபாடுகளோடும் இருக்கின்றனர். பெண் குழந்தைகளில் 34 சதவீதம் குழந்தைகள் முதல் வார்த்தையை, பிறந்த 10 அல்லது 11வது மாதத்தில் உச்சரித்து விடுகின்றனர்



source:dinakaran


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails