வாஷிங்டன், ஜன. 16-
கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து டெட்ராய்ட் வந்த அமெரிக்க விமானத்தை தகர்க்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக நைஜீரியாவை சேர்ந்த உமர்பரூக் அப்துல் முத்தலாப் (23) என்பவன் கைது செய்யப்பட்டான்.
இவன் ஏமனில் பயிற்சி பெற்ற அல்கொய்தா தீவிரவாதி ஆவான். இதற்கிடையே இந்த விமானத்தை தகர்க்க நடந்த சதிக்கு பொறுப்பு ஏற்பதாக ஏமனில் இருந்து அல்கொய்தா தீவிரவாதிகள் அறிவித்து இருந்தனர்.
இதை தொடர்ந்து அமெரிக்க விமானங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஏமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் உடல் முழுவதும் எக்ஸ்ரே மூலம் பரிசோதிக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று விமானத்தை தகர்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்டாலும் விடமாட்டோம் அமெரிக்க விமானங்களை குண்டு வைத்து தகர்ப்போம் என அல்கொய்தா தீவிரவாதிகள் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
எனவே, அமெரிக்க விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் ஜானெட் நபோலிபோனோ தெரிவித்தார்.
அமெரிக்க விமானங்களில் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய ராணுவ வீரர் களும் அனுப்பப்பட்டு வருகின்றனர். இதற்கான உத்தரவை அதிபர் பாரக் ஒபாமா பிறப்பித்துள்ளார் என்றும் அவர் கூறினார்
source:maalaimalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment