குவிந்த புரோகிராம்களை நீக்க...
இணையத்தில் பல்வேறு வசதிகளைத் தரும் எக்கச்சக்கமான புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவை இலவசமாகக் கிடைப்பதால், நாம் உடனே டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கிறோம். ஆனால் சில நாட்களில் அதனை மறந்துவிடுகிறோம்; தொடர்ந்து பயன்படுத்துவதில்லை. இப்படி பல புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் தங்கிவிடுகின்றன. இவற்றை எப்போதாவது, கண்ட்ரோல் பேனல் சென்று, ஆட்/ரிமூவ் பிரிவின் மூலம் ஒரு சிலவற்றை நீக்குகிறோம். அப்படி நீக்கும் போதும், அந்த புரோகிராம் சார்ந்த சில ரெஜிஸ்ட்ரி வரிகள் தங்கிவிடுகின்றன. சில பைல்களும் அவ்வாறே கம்ப்யூட்டரில் வைக்கப்படுகின்றன. இதனால் கம்ப்யூட்டரின் செயல்வேகம் மெதுவாகிறது. சில மோசமான வேளைகளில், புரோகிராம்கள் முடங்கியும் போகின்றன.
இது போன்ற குறைகளை நீக்கித் தேவையற்ற புரோகிராம்களை முழுமையாக நீக்க இணையத்தில்Absolute Uninstaller என்ற புரோகிராம் கிடைக்கிறது. இது ஆட்/ரிமூவ் மூலம் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை மேற்கொண்டாலும், அதனைக் காட்டிலும் கூடுதல் திறனுடன் செயல்படுகிறது. தேவையற்ற ரெஜிஸ்ட்ரி கீகள், சார்ந்த டெஸ்க்டாப் ஐகான்கள், ஸ்டார்ட் மெனுவில் எழுதப்பட்ட என்ட்ரிகள் ஆகியவற்றைக் கண்டறிந்து நீக்குகிறது.
இந்த புரோகிராம், சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை நீக்கும்போது, அழிக்காமல் விடப்படும் பைல்களைக் கண்டறிந்து முழுமையாக அழிக்கிறது. தானாகவே தேவையற்ற பைல் எண்ட்ரிகளின் இடமறிந்து காட்டுகிறது.
இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களை, அவற்றிற்கான ஐகான்களுடன் தெரிவிக்கிறது. இதன் மூலம் நாம் நீக்கப்பட வேண்டிய புரோகிராம்களை எளிதாகத் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்கும் வகையில் அவற்றின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தி, பின் நீக்குவதற்கான கட்டளை கொடுத்தால், மொத்தமாக, அவற்றின் சுவடே இல்லாமல் நீக்குகிறது.
பொதுவாக ஆட்/ரிமூவ் புரோகிராம் செயல்பட சற்று நேரம், பிடிக்கும். அப்ஸல்யூட் அன் இன்ஸ்டாலர் மிக வேகமாகச் செயல்படத் தொடங்குகிறது. அத்துடன் இதன் இன்டர்பேஸ் மிக எளிதாக இதனை இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை http://www.glarysoft.com /absoluteuninstaller/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் சென்று டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். அண்மையில் இதன் புதிய பதிப்பு Absolute Uninstaller 2.8.0.636 2.8.0.636 வெளியாகியுள்ளது.
Saturday, January 9, 2010
இந்த வார டவுண்லோட்
source:dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment