Monday, January 4, 2010

எல்லா பிரவுசர்களுக்குமான சில குறுக்கு சாவிகள்

அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள்
 
 

பெரும்பாலும் அனைத்து பிரவுசர்களிலும் பல ஷார்ட் கட் கீகள் ஒரே செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா, குரோம் என எதனை எடுத்துக் கொண்டாலும் சில ஷார்ட் கட் கீகள் பொதுவாகவே தான் செயல்படுகின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.


பல வேளைகளில் நாம் பிரவுசர்களில் அதற்கு முன் பார்த்த தளத்தைப் பார்க்க பின் நோக்கிச் செல்லும் பேக் பட்டனை அழுத்துவோம். இதன் அருகே கீழ் நோக்கியவாறு ஓர் அம்புக் குறியினைப் பார்க்கலாம். இதனை அழுத்தினால் நீங்கள் முன்பு பார்த்த தளங்கள் 5 முதல் 10 வரை கிடைக்கும். இந்த பட்டியலில் இருந்து நீங்கள் மீண்டும் பார்க்க விரும்பும் தளத்தைப் பார்க்கலாம். சில தளங்கள் அடுத்தடுத்து கிளிக் செய்து உங்களை முன் நோக்கிப் போகச் சொல்லும். அது போன்ற தளங்களில் நீங்கள் பிரவுஸ் செய்கையில், முதன் முதலில் பார்த்த தளத்திற்குச் செல்ல வீணாகப் பலமுறை பேக் பட்டனை அழுத்த வேண்டியதில்லை. இந்த அம்புக் குறியை அழுத்தி, தளமுகவரிகளைக் கண்டு கிளிக் செய்து பெறலாம். 


நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தினைத் தவறுதலாக மூடிவிட்டீர்களா? அதன் முகவரி தெரியவில்லையா? கவலை வேண்டாம். கண்ட்ரோல்+ஷிப்ட்+ட்டி (Ctrl+Shft+T)  அழுத்துங் கள். இதனை மீண்டும் மீண்டும் அழுத்தினால் அதற்கு முன் மூடிய தளங்கள் வரிசையாகத் திறக்கப்படும். பேக் ஸ்பேஸ் மற்றும் ஆல்ட் + இடது அம்புக் குறி ஒரு தளத்தைப் பின்னோக்கிக் காட்டும். ஆல்ட் + வலது அம்புக் குறி அழுத்தினால் ஒரு தளம் முன்னோக்கிக் காட்டும். 
எப்11 அழுத்தினால் அப்போதைய இணைய தளம் முழுப் பக்கத்திலும் காட்டப்படும். மீண்டும் அழுத்தினால் முந்தைய நிலைக்குத் திரும்பும். 
எஸ்கேப் கீ அழுத்தினால் இணைய தளம் டவுண்லோட் ஆவது நிற்கும். 
Ctrl+ '+'  அல்லது '' அழுத்தினால், இணைய தளத்தில் உள்ள டெக்ஸ்ட் எழுத்தின் அளவு கூடும், குறையும். 
.Com  என்று முடியும் தளத்தின் முகவரியை முழுமையாக்க தளத்தின் பெயரை மட்டும் டைப் செய்துCtrl +Enter அழுத்தினால் போதும். 
.net  என முடியும் தளத்திற்கு Shift + Enterஅழுத்த வேண்டும். 
.org  என்பதில் முடியும் தளப் பெயராக இருந்தால், பெயரை மட்டும் டைப் செய்து Ctrl + Shift + Enter அழுத்தவும்.
ஏதேனும் விண்டோவில் உங்களுடைய தகவல்களை நிரப்பி இருக்கிறீர்கள். இவை அனைத்தையும் நீக்கிட Ctrl + Shift + Del அழுத்தவும். 
Ctrl + D  அழுத்தினால் அப்போதைய தளத்திற்கு புக்மார்க் ஏற்படுத்தப்படும். 
Ctrl + I  அழுத்தினால் அப்போதைய புக்மார்க்குகள் காட்டப்படும். 
Ctrl + J அழுத்தினால் டவுண்லோட் விண்டோ காட்டப்படும். 
Ctrl + N  கீகளுக்கு புதிய பிரவுசர் விண்டோ திறக்கப்படும். 
Ctrl + P அப்போதைய பக்கத்தினை அச்சடிக்கும்.
Ctrl + T  புதிய டேப் ஒன்றைத் திறக்கும். 
Ctrl + F4  அல்லது Ctrl + W அப்போது தேர்ந்தெடுத்த டேப்பினை மூடும்.
திறக்கப்பட்ட டேப்கள் வழியே செல்ல Ctrl + Tab பயன்படுத்த லாம். 
ஸ்பேஸ் பார் (Space bar) அழுத்தினால் ஒரு பக்கம் கீழாகச் செல்லலாம். ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (Shift + Space bar) அழுத்தினால் ஒரு பக்கம் மேலாகச் செல்லலாம். 
இணைய தளம் ஒன்றில் ஏதேனும் லிங்க் இருந்தால் அதனை புதிய விண்டோவில் திறக்க ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு அந்த லிங்க் மீது கிளிக் செய்திடவும். அல்லது அதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், புதிய டேப், புதிய விண்டோவில் அதனைத் திறக்கும்படி செய்திடலாம்


source:dinamalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails